வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் “குள்ளநரிக்கூட்டம்” வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “எங்க காட்டுல மழை”.
எங்க காட்டுல மழை படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். படத்தின் முன்னோட்டத்தை திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர்கள் எழில், சமுத்திரக்கனி, சுசீந்திரன் ஆகியோர் ஜூலை 15ம் தேதி தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.
இப்படத்தில் மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி, அருள்தாஸ், சாம்ஸ் மற்றும் அப்புக்குட்டி நடிக்கிறார்கள். படத்தினை ஸ்ரீ பாலாஜி இயக்குகிறார். படத்திற்கு ஸ்ரீ விஜய் இசையமைக்க, ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். கலை பணியை முனி பால்ராஜும், படத்தொகுப்பினை ஜெஸ்டின் ராயும் செய்கிறார்கள். சினேகன், நா.முத்துக்குமார், பிரம்மா, விஜய்சாகர் என நான்கு பேர் இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளனர். பாடல்களை ரஞ்சித், கார்த்திக், முகேஷ், சுஜீத், ஹரிசரன், கானா பாலா மற்றும் சுகன்யா பாடியுள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எங்க காட்டுல மழை படம் விரைவில் வெளியாகவுள்ளதாக அப்படத்தின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.