“ஜாக்சன் துரை” திரைப்பட விமர்சனம்:

Jackson Durai Review
நடிகர்கள்: சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகி பாபு, ஷண்முக சுந்தரம், ஜாகேறி, நேக மேனன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பாளர் – MS ஷரவணன், இயக்கம் – தரணிதரன், ஒளிப்பதிவாளர் – யுவா, இசை – சித்தார்த் விப்பின், பாடல்கள் – மோகன்ராஜன், தரணிதரன், வெளியீடு – ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

“ஜாக்சன் துரை”—- ரசிகர்களை சிரிக்க வைப்பது என்ற ஒன்றை உறுதி எடுத்துக்கொண்டு டைரக்டர் படத்தை தந்துள்ளார். “அயன்புரம்” ஊரில் ஒரு பாழடைந்த பங்க்ளா. அங்கு ஜாக்ஸன் மற்றும் துரை என்ற இருவரின் ஆவிகள் அட்டகாசம் செய்கிறதாம் வித்தியாசமாக இவற்றை விரட்ட வெறும் சீன்களை காட்டும் போலிசை பணி நிமித்தமாக கட்டாயமாக அனுப்பப் பட, “மோட்டார் சைக்கிள்” என்ற அறிமுக பாடலுடன்..ஹீரோ சிபிராஜ் ஆர்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் ரசிக்கவைக்கிறார்.

பிளாஷ்பேக் கதையாக வரும் ஆங்கிலேய எதிர்ப்பு “துரை” அவரின் வீர மகளின் கதை அழுத்தமாக உள்ளது. குறிப்பாக சத்யராஜ் ஒரு காட்சியில் துரோகம் செய்த ஒருவனை பார்த்து பேசுவது சாட்டையடி. “கை கூலி கருனா” என்று ஆவேசமாக கூறும்போது கிளாப்ஸ், கருணாகரன் சிபியுடன் அடிக்கும் லூட்டிகள் செம காமெடி, குடித்துவிட்டு “விஜி’யை” நீயே கட்டிக்கோ என்பதும், போதை தெளிந்தபிறகு மறுப்பது என்று தொடரும் இவர்களின் அமர்க்களம் ரசிக்கவைக்கிறது.

மாளிகையில் சிறுவனையும் காமெடி பேயாக காட்டுவது, அவன் விசில் ஊதுவதும், வெளியே மேள தாளம் போட்டு குத்தாட்டம் ஆடுவது அருமை. ரௌடிகள் விட்டுச்சென்ற இயத்திர துப்பாக்கியை சாமர்த்தியமாக பயன்படுத்தி சிபிராஜ் பேய்களை அழிக்க திட்டமிடுவது கதையில் ஒரு விறுவிறுப்பு. கதாநாயகியாக பிந்துமாதவி அழகாக தெரிகிறார். யோகிபாபு பேசும் வசனம் ஒவ்வொன்றும் பலே யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் குரல் வளத்தில் பல காமெடி காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.

அறிவுத்திறமையால் இறந்து போன இரண்டு ஆவிகளை மோதவிட்டு சிபிராஜ் வெற்றிபெறுவது ஓகே. மோட்டார் சைக்கிள் பாடல் FM’ல் இப்பவே ஹிட். பிளாஷ்பேக் கதையில் வீர மகளாக வரும் சிறுமி அசத்தலான நடிப்பு. லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் ஜாக்ஸன் துரை சக்சஸ் துரை.

விமர்சனம் – பூரி ஜெகன்.

Leave a Response