“அப்பா” திரைப்பட விமர்சனம்:

Appa Review
நடிகர்கள்: சமுத்திரகனி, தம்பி ராமையா, வினோதினி, ப்ரீத்தி, நமோ நாராயணன், வேலா ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலக்ஷ்மி, காப்ரிலா, நசாத், திலீபன், அணில் முரளி மற்றும் அதிரா.

தொழில்நுட்ப கலைஞர்கள்: எழுத்து, இயக்கம் & தயாரிப்பு – சமுத்திரகனி, இசை – இளையராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட்.M.நாதன், படத்தொகுப்பு – A L ரமேஷ், தயாரிப்பு நிறுவனம் – நாடோடிகள்.

“அப்பா”…இப்போது லிஜெண்டு கே.பாலச்சந்தர் சார் இருந்திருந்தால் முதல் பாராட்டு கடிதம் அவர் எழுதியனுப்பியிருப்பார். ஒவ்வொரு காட்சியையும் பாராட்டவேண்டும். டைட்டிலில் 3- தம்பதிகள், 3- குழந்தைகள்(கரு)உருவாவது 3- அப்பாக்களின் யதார்த்த குணாதிசியங்கள், அவர்கள் மணைவிகளின் யதார்த்த உணர்வுகள் இப்படி ஆரம்ப காட்சியே சிக்ஸர். குழந்தை வளர அவனை பிளே ஸ்கூலில் விடும் தவறான விஷயத்தை தனது ஸ்டைலில் வெளுக்க ஆரம்பிக்கும் டைரக்டர், கதையின் நாயகன் படம் முடியும்வரை சாட்டையை நிப்பாட்டவே இல்லை என்பது பிரமாதம். கான்வென்ட் பள்ளிகளில் ப்ராஜெக்ட் என்ற ஒரு கமர்ஷியல் கொள்ளையை இப்படி தோலுரித்துக்காட்டியதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

பள்ளி நிர்வாகத்திடம் உண்மையை கூற எதிர்த்து பேச, பள்ளியிலிருந்து மாணவனை வெளியில் அனுப்பிவிட, மனைவி கணவனை பிரிய, தனியாக ஒரு குழந்தையை “அப்பா” எப்படி அடையாளம் காணப்படவைக்கிறார் என்பதை சிறப்பாக காட்டிய “அப்பா, அற்புதம் பா” துணிச்சல் வர மகனை பஸ்சில் தனியாக அனுப்பிவிட்டு அவன் வராமல் அவனை தேடி பைக், பிறகு சைக்கிள், பிறகு ஓட்டமும், நடையுமாக “அப்பா” அலைவது கண்களை ஈரமாக்குகிறது.  மகன் பத்திரமாக வந்துவிட கர்வத்துடன் அவனை அணைப்பது சபாஷ்.  அவனுக்கு நீச்சல் பிடிக்கிறது என்பதை அவன் செய்கையால் அறிந்து உடனே நீச்சல் பயிலகத்தில் சேர்த்து அவனை தயார்படுத்துவது, பேருந்தில் ஒரு மாணவியை கண்டதும் மாணவன் மனசு அலைபாய்வது, அவன் உதறல் இவற்றை அறிந்து, டீன் ஏஜ் வயது தேடலை சரியாக சொல்லி, ஆண் பெண் பாலின வித்தியாசத்தை யதார்த்தமாக விளக்கி அந்த மாணவியை அழைத்து பேசுவது அடுத்த ஸ்டெப் கல்வி.

 இதே சூழலில் மகன் இப்படித்தான் வரவேண்டுமென என்று சராசரி தந்தை(சிங்க முத்து) கேரக்டர், மகனை குழந்தை வயது முதல் இம்சிப்பது, விளையாடும்போது பைக் சத்தத்தை கேட்டாலே அலறும் அவன் பயம், ஐயோ நல்ல உதாரணம், அடுத்து இன்னொரு தந்தை (நமோ நாராயணன்) எதையும் கண்டுகாதே, சூதானமா இரிக்கனும், இருக்குற இடமே தெரியக்கூடாதுன்னு சொல்லியே மகனை வளர்ப்பது காமெடி கலந்து கண்ணீரை வரவழைக்கும் கிளைக்கதை…இந்த 3 மாணவர்களும் நட்பு பாராட்டி வளர ஆஹா! அருமையான காட்சிகள். உயரம் குறைவான மாணவனின் திறமையை அறிந்து அவனை உயரத்துக்கு கொண்டுபோக, உலகமறிய செய்யும்

“தயா” அப்பா சூப்பர்ப்பா! தாயின்றி தனியே அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த மகன் நீச்சல் போட்டியில் உலக சாதனை படைக்க, அவன் வளர்ந்த காரணமாக அவன் ஆசை என்ன? என்று அகேட்கும் “அப்பா”.  மகன் அம்மாவை பாக்கனும்னு சொன்னதும் மகிழ்வுடன் அனுப்பிவைக்க தாத்தா வீட்டுக்கு போகும் பேரன் மாமன்களை செய்யும் லந்து சூப்பர்.  திரும்பி வந்த மணைவியை இன்னமும் நேசிக்கும் கணவனாக அப்பாவை பார்க்கும் மகன், ஆனந்தமடைய நமக்கும் ஆனந்தம். தயாவின் நண்பராக வரும் பிரம்மச்சாரி ஒருவரின் சில வரி சிறுகதை அழகான கவிதை.  வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. ஒரு வசனத்தை கவனிச்சா அடுத்த வசனம் மிஸ், கவனமாக பார்க்கவேண்டும். இந்த 3- மகன்களின் வாழ்வியல் கல்வி படம், பாடமாக அருமை.  ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு, மிக மிக பிரமாதம்.   அனைத்தும் “அப்பா” படத்துக்கு பலம்.  இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு துணையாக செல்கிறது.  இருக்கிறதே தெரியக்கூடாது, வளர்ப்பு சரியில்லை போன்ற வசனங்கள் செம மேட்சிங், இளையகவிஞராக நடித்த மாஸ்டர் நஷாந்(மயில்வாகனம்) அடுத்த படத்தில் வேற உசரத்துக்கு போவது நிஜம்…நீல நந்தினி, சகீரா பானு கேரக்டர்களில் நடித்த யுவலஷமி, கேப்ரீலா அசத்தலான நடிப்பை தந்து கலக்கிட்டாங்க.  குறிப்பாக நீலநந்தினி கண்களை கலங்கவைத்து மனசுல நிற்கிறார்.  “அப்பா” முழுமையான, தெளிவான, விவரமான, இன்றைய கமர்ஷியல் கல்வி கொள்ளையை நிஜத்தை துணிச்சலாக காட்டியுள்ள காவியம்.

சிறப்பு குறிப்பு:”வயித்துல வளரும் கரு” தயா அப்பா வை பற்றி அறிய வாய்ப்பிருந்தா இப்படி ஒரு “அப்பா” தனக்கு வேணும்னு நிச்சயம் பிராத்தனை செய்யும், அந்தளவு நல்ல “அப்பா”, “சிறந்த அப்பா இந்த அப்பா”. “மகிழ்ச்சி” ” வாழ்த்துக்கள்”

“அப்பா”—ஸ்பெஷல் பாராட்டு: படத்தின் தொடக்கத்தில் “புகை உயிரை கொல்லும், மது உயிருக்கு நாட்டுக்கு கேடு என்ற சப்பை கட்டும் விளம்பரமும் இல்லை, படத்தில் எந்த கேரக்டரும் புகை பிடிக்கல, மது அருந்தவது போலில்லை. பாராட்டுக்கள்.!

விமர்சனம்: பூரி ஜெகன்.

Leave a Response