“முத்தின கத்திரிக்கா” திரைப்பட விமர்சனம்:

Muthina Kathirka
நடிகர்கள்: முத்துபாண்டியாக சுந்தர்.C, மாயாவாக பூனம் பாஜ்வா, சரவணனாக சதீஷ், புல்லட் மருதுவாக VTV கணேஷ், வாஞ்சிநாதனாக சிங்கம்புலி, நாயகனின் அம்மாவாக சுமித்ரா, பாவி பாபுவாக யோகி பாபு, நாயகியின் தாய் மாதவியாக கிரண், ரவி மரியா, ஸ்ரீமன், சித்ரா லக்ஷ்மணன் மற்றும் சிங்கப்பூர் தீபன்

தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு – அவனி மூவீஸ், எழுத்து & இயக்கம் – வேங்கட் ராகவன், இசை – சித்தார்த் விபின், ஒளிப்பதிவு – பானு முருகன், பாடல்கள் – மோகன் ராஜன், படத்தொகுப்பு – ஸ்ரீகாந்த்.N.B, திரைப்பட வெளியீடு – ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

“முத்தின கத்திரிக்கா”—- சுந்தர்.C’யின் வழக்கமான அக்மார்க் பார்முலா காமெடியில் ஒரு படம். அரசியலை வெறுக்கும் குடும்பத்திலிருக்கும் ஹீரோ வீட்ல உடுத்த வேற உடை இல்லை என்பதால் முதல் முறையாக வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிகிறார். அதன்பிறகு சூழ்நிலை அவனை அரசியல்வாதியாக மாற்றிவிடுகிறது. பிறகு அந்த உள்ளூர் லெட்டர்பேடு கட்சியை வைத்து அவர் ஆடும் காமெடி கலாட்டாக்கள் செம செம காமெடி டிரீட். தங்கைக்கு கல்யாணம் செய்துவைக்கிற கடமை, தனக்கு முன் தம்பி கல்யாணம் செய்து கொண்டதால், மிக மிக முக்கியமாக முத்து பாண்டி லவ்வடிப்பவர்கள் இவரை கழற்றி விடுகிறார்கள். அதனால் 40 வயது பிரம்மச்சாரியாக(டைட்டில் காரணகர்த்தா) வாழ்ந்து படுகிற ரியல் வேதனை, மாயா’வை (பூனம் பஜ்வா) பார்த்த நிமிடம் காதலிக்க துவங்கி அதை கல்யாணமாக மாற்ற போராடுவது, அடுத்த கல கல… டில்லி பயணம் இந்தியா கேட் காமெடி சரவெடி. உள்ளூரில் VTV கணேஷ், சிங்கம்புலி தங்கள் சுயநலத்துக்காக செய்யற சேவைகளை அப்படியே இவரின் அரசியல் வளர்ச்சிக்கு ஷிப்ட் செய்துகொள்கிற திறமை சூப்பர்.

M L A சீட் பெற்று, மந்திரி…அதுவும் வருவாய் துறை மந்திரி என அளிப்பது ஐயோ, தன் பள்ளி நாளில் டாவடித்த சக மாணவியின் மகள் மாயா என அறிந்தபிறகு அவர் ஆடுகிற அடுத்த ஆட்டம் முடியல.. ஹீரோ தோழனாக சதீஷ், சரவணன் என்ற கேரக்டரில் ஜமாய்துவிட்டார். தன் அக்காவிடம் ” ஹலோ” சொல்லு மாமா தாலாட்டு போல பீல் செய்வார் என்று கூறி டம்மி போனில் லைன் தர அந்த அக்காவும் ஹலோ என்று கூறிக்கொண்டே இருப்பது, அந்த கேப்ல சரவணன் டாவடிக்கிற லூட்டி இப்படி அனைவருமே ரசிகர்களை சிரிக்க வைப்பதில் போட்டி போட்டு கலக்கிவிட்டனர். ஐ போனை வடை போடுற இலையாவது, உடனே இஞ்சி முரப்பா தந்து கலெக்ட்செய்யவேண்டிய உனக்கெல்லாம். ஐ போனை வாங்கி தந்த என்ன என்று சரவணன் புலம்புவது, மாப்பிள்ளை வைபவ் வந்து காணாம போற டிவிஸட் இயக்குனரின் திரைக்கதை திறமை. காமெடி வில்லனாக தொடர்ந்து வந்தாலும், யோகி பாபு தனித்து ஜொலிக்கிறார்.

பானு முருகனின் ஒளிப்பதிவு பளிச். சிதார்த் விபினின் இசை கதையோடு செல்கிறது. லொகேஷன்கள் அருமை. “முத்தின கத்திரிக்கா” (நகை) சுவை அருமை.

விமர்சனம்: பூரி ஜெகன்

Leave a Response