“ஒரு நாள் கூத்து” திரைப்பட விமர்சனம்:

Oru Naal Koothu Review
நடிகர்கள்: ராஜ் ஆக தினேஷ், லக்ஷ்மியாக மியா ஜார்ஜ், காவ்யாவாக நிவேதா பேதுராஜ், ராகவேந்திராவாக கருணாகரன், சுஷீலாவாக ரித்விக்கா, மோகன்(ஷோல்டர்) ஆகா பால சரவணன், சதீஷாக ரமேஷ் திலக் மற்றும் ராம்தாஸ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இயக்கம் – நெல்சன் வெங்கடேசன், கதை மற்றும் திரைகதை – சங்கர்தாஸ், ஒளிப்பதிவு – கோகுல் பினாய், இசை – ஜஸ்டின் பிரபாகர், பாடல்கள் – மதன் கார்கி, விவேக் மற்றும் சங்கர்தாஸ், படத்தொகுப்பு – சாபு ஜோசப்.V.J, தயாரிப்பு – கேனன்யா பிலிம்ஸ் சார்பாக J.செல்வகுமார்.

“ஒரு நாள் கூத்து”—- மூன்று பெண்களின் இன்றைய வாழ்க்கை நிலை, யதார்த்தம் + கற்பனை கலந்த ஒரு படம். இயக்குனருக்கு முதல் படம். பாராட்டுக்கள் “அட்டகத்தி” தினேஷ், “ராஜ்” கேரக்டரில் அற்புதமாக நடிப்பில் வெளுத்துக்கட்டியுள்ளார். “மியாஜார்ஜ்” லஷ்மியாக, அப்பா சொல் தட்டாத மகளாக, தன் நிலைமையை அப்பாவிடம் கூற முடியாத தவிப்பு. தன் அக்கா மகள் பெரியமனுஷி ஆகிவிட, தான் இன்னமும் திருமணத்துக்கே தயாராகாத நிலையில் உள்ளோமே என்ற ஏக்கம், நிஜ வலி. அடுத்து “காவ்யா”, ஐடி துறை வேலை, ஒரு காதலன்(ஆனால் அவன் வசதியில் காவ்யாவை விட பல மடங்கு குறைந்தவன்). ராஜ் துணிச்சலாக திருமணம் செய்துகொள்ள முடியாமல், காதலையும் விட முடியாமல் தவிக்கிற தவிப்பு செம பீலிங். காவ்யாவின் அப்பா வசதி, அந்தஸ்து திமிரில் ராஜை வார்த்தையில் அவமானப்படுத்திவிடுவதை அறியும் போது, “ராஜ்+ காவ்யா” முத்த காட்சிகள் இன்றைய நிஜ காதலர்களின் நிலையை உணர்த்தும்.
அடுத்து அவள் எடுக்கும் முடிவு, திருமண மேடையில் நிகழும் ஆச்சர்யம் இப்படி படு வேகத்தில் திரைக்கதை. மூன்றாவது பெண் சுசீலா(ரித்விகா) ஒரு FM’ல் RJ’வாக பணி, ஏதோ ஒரு காரணத்தில் திருமணம் தள்ளிப்போக, அவளின் ஏக்கம்., சுற்றி உள்ளவர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் தவிக்கும் தவிப்பு(வலி) ஆஹா அற்புதமான நடிப்பு. தன்னுடன் பணி புரியும் சக RJ சதீஷ்(ரமேஷ்நிலக்), இதமான இயல்பாக நடித்து சுசீ மனசை கவர்வது இன்றைய நிஜம். ஒருவனை நம்புவதால், என்ன ஆகிறது நிலை, இப்படி செம சுவாரஸ்யங்கள். மூன்று கேரக்டர்களில் நடித்துள்ள மூவருமே போட்டி போட்டு பாராட்டுக்களை அள்ளுவது உறுதி. RJ சுசீ சூப்பர் ரித்விகா.

படத்தின் தொடக்கம் மூன்று பேரின் வாழ்க்கையின் நிகழ்வாக ஒரே கோட்டில்(ஒரே காட்சியில்) காட்டியது டைரக்டரின் சாமர்த்தியம். வசனங்கள் பல இடங்களில் சாட்டையடி, ஒவ்வொரு துணை கேரக்டர்களும் அருமை. குறிப்பாக திருமணம் என்ற ஒன்றை காணாமல் வேதனையில் மூத்த வயது பேச்சிலராக வரும் சார்லி கேரக்டர் சபாஷ் பெறுவார். சில காட்சிகளே வந்தாலும் கருணாகரன், தங்கையை கட்டி கொடுத்துவிட்டு தனக்கு திருமணம் என்று நிஜமாக வாழும் பல அண்ணன்களின் அடையாளம். இப்படி இந்த படத்தில் பல ஆச்சர்ய ஆனந்தங்கள். ஒளிப்பதிவு அருமை. நண்பனாக வரும் ஷோல்டர் மோகன்(பாலசரவணன்) குட் ஆக்டிங், “அடியே அழகே” பாடல் ஏற்கனவே எல்லா FM’களிலும் செம செம ஹிட்.

விமர்சனம்: பூரி ஜெகன்.

Leave a Response