“வேந்தர் மூவீஸ்” மதன் கோடிகளில் பணம் மற்றும் காதலியான கல்லூரி மாணவியுடன் ஓட்டமா?

Gopika_02_Title
கோடம்பாக்கம் வட்டாரத்தில் தற்போது சுட…சுட ஓடும் செய்தி, காணாமல் போன வேந்தர் மூவீஸ் மதன் பற்றி தான். நாகேர்கோவிலை சேர்ந்தவர் தான் இந்த மதன். இவருடைய இயற் பெயர் B.பாலச்சந்தர் என்றும் இவருடைய தந்தையார் பாலகிருஷ்ணன் என்றும் சொல்லப்படுகிறது. இவர் மீது தன்னுடைய சிறு வயதில் சில வழக்குகள் இருந்த காரணத்தினால், நாகர்கோவிலை விட்டு சென்னை வந்து குடி அமர்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. தன்னுடைய உண்மையான பெயரான பாலகிருஷ்ணனின் பெயரில் வழக்குகள் இருந்த காரணத்தினால் அவர் தன்னுடைய பெயரை S.மதன் என்றும் தான் பெங்களூரில் பிறந்ததாகவும் மாற்றியமைத்து கொண்டார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

அப்போது சென்னை வந்து செட்டில்லான மதனுக்கு யாரோ ஒருவர் மூலம் SRM கல்லூரி மற்றும் SRM குழுமம் நிறுவனருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த அறிமுகம் இருவருக்குள் மிக நெருக்கமாகி, SRM கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்மிஷன் சீட் வாங்கி தரும் ப்ரோகர் ஆனார் மதன். இவருடைய திறமையினால் SRM கல்லூரிகளில் பல மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், அதனால் அந்த கல்லூரிகளுக்கும் அமோக வருமானம் இருந்ததாக சொல்லப்படுகிறது. கல்லூரிக்கு மட்டும் வருமானம் அல்ல, மதனுக்கும் கமிஷன் பணமாக பல லட்சங்கள், கோடிகள் என வருமானம் ஈட்டியுள்ளது இந்த மாணவர் சேர்க்கைக்கான சீட்.

பின்னர் 2011’ம் ஆண்டு “வேந்தர் மூவீஸ்” நிறுவனத்தை ஆரம்பித்து பல படங்களை விநியோகம் செய்தும் சில படங்களை தயாரித்ததும் இருந்துகொண்டிருக்கிறார் இந்த மதன். இந்த மதன் தான், இந்த மாதம் 29’ம் தேதி வாரணாசியில் “காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்” என்று ஐந்து பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, அதன் நகல்களை தனக்கு நெருங்கிய நபர்கள், ஊடகவியாளர்கள், சினிமாத்துறையை சார்ந்த சிலருக்கு என “வாட்ஸாப்” மூலம் அனுப்பியுள்ளார். மதன் அரங்கேற்றிய இந்த நாடகம் உண்மையா அல்லது ஒரு செட்டப்பா என கோடம்பாக்கம் வட்டாரங்கள் மற்றும் SRM கல்லூரி வட்டாரங்கள் முனுமுனுக்கிறது.

இதோடு போச்சான்னு பாத்தா, டமாலுனு வெடிக்குது இவருடைய காம ஆட்டம். என்னடா காம ஆட்டம் என்கிறீர்களா? தற்போது அவருக்கு மூன்று மனைவிகள், ஒரு காதலி என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி அப்பப்போ சில முகம்கள் இவருடைய இடத்தில் முகாம்மிட்டு செல்லுமாம்.

மதனுடைய முதல் மனைவி சிந்து, இவருக்கு வேதிகா என்ற ஒரு மகள் உண்டு. இரண்டாவது மனைவி சுமலதா, இவருக்கு தீரஜ் என்ற ஒரு மகன் உண்டு. மூன்றாவது மனைவி பெயர் அணிதா. இந்த மூன்று மனைவிகள் தவிர்த்து அவருக்கு சென்னை அயனாவரத்தை சேர்ந்த கோபிகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற BDS(பல் மருத்துவம்) படிக்கும் ஒரு மாணவியுடன் காதல். இந்த பெண் சில வருடங்களுக்கு முன்பு சில லட்சம் ரூபாய் பணம் கொடுத்து மதன் மூலமாக ஒரு கல்லூரியில் சீட் வாங்கி படித்துகொண்டிருந்தார். மதன் தன்னுடைய ஆசையை அந்த பெண்ணிடம் எப்படியோ வெளிப்படுத்தி, அந்த கோப்பிக்காவை தன் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். கோபிக்காவோ சில மாதங்களுக்கு முன்பு, தான் தன்னுடைய கல்லூரி விடுதியில் தங்கி படிப்பதாக சொல்லி வீட்டிலிருந்து சென்று விட்டார். பெற்றோர்களோ மகள் சொல்வது உண்மை என்று தான் நம்பினார்கள், ஆனால் அது உண்மை இல்லை!

சென்னை துரைபாகத்தில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் கோபிக்காவை குடி அமர்த்தி அவருடன் லிவிங் டுகெதர்(Living Together) என மதனும் கோபிக்காவும் இதுநாள் வரை குடும்பம் நடத்திக்கொண்டு இருந்துள்ளனர் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. கோப்பிக்கா தற்சமயம் கர்பமாக உள்ளதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மதனை வற்புறுத்தி கொண்டிருந்ததாகவும் அவருக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் சொல்கின்றன.

அதுமட்டுமின்றி SRM கல்லூரியில் மருத்துவ அட்மிஷனுக்காக சுமார் ஐம்பது பேரிடம் தலா அறுபது லட்சம் என மதன் வாங்கியுள்ளார் என்றும், அந்த பணத்துடன் அவர் தலைமறைவாகியுள்ளார் எனவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

“காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்” என்று எழுதிவிட்டு காணாமல் சென்ற மதன் இந்த கோபிக்காவையும் உடன் அழைத்து சென்றிருப்பாரா எனவும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் சந்தேகிக்கிறார்கள். இது இப்படி இருக்க, அவருடைய மனைவி, குடும்ப நண்பர்கள் மற்றும் தென்னிந்தியா தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளரான “அம்மா கிரியேஷன்ஸ்” T.சிவா வாரணாசி, காசி என மதனை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். வாரணாசியில் காவல்துறையினர் மதனை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக T.சிவா தெரிவித்துள்ளார்.

மதனை பற்றிய உண்மை நிலவரம் காவல்துறையினரால் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. லெட்ஸ் வெயிட் அண்ட் ஸீ.
Gopika_01

Gopika_03

Leave a Response