கடன்காரர்களை திசை திருப்பும் முயற்சியே தயாரிப்பாளர் PTS ஏற்பாடு செய்த உண்ணாவிரத போராட்டம்:

PTS Hunger strike 1
விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு உலகெங்கும் வெளியிடப்பட்ட படம் “புலி”. இப்படத்தை சிம்புதேவன் இயக்க, அனிரூத் இசையமைக்க,& P. T. செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் இனைந்து தயாரித்தனர்.

திரைப்படம் வெளிவந்த முதல் நாளே படம் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள். படம் எதிர்பார்த்த வகையில் வெற்றி பெறவில்லை என்பது உண்மை. படத்தின் இசை வெளியீட்டில் தயாரிப்பாளர் P. T. செல்வகுமார், புலி படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் ஆஹா ஓஹோ என சகட்டுமேனிக்கு புகழ்ந்து தள்ளினார். அந்த புகழ்ச்சி அவர் இதயத்தில் இருந்து இல்லை, அது அவருடைய உதட்டில் இருந்து வந்த சந்தர்ப்பவாத புகழ்ச்சி என அனைவரும் கொஞ்ச நாட்களில்லேயே புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

புலி படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு, தயாரிப்பாளர்கள் சார்பில் சம்பள பாக்கி வைக்கப்பட்டது. பாக்கி பணத்தை கேட்ட ஸ்ரீதேவிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இருவர் தரப்பிலிருந்தும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. புகாரை விசாரித்த தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் மீது தவறு என்று தெரிவித்தனர். பின்னர் ஸ்ரீதேவிக்கு, தயாரிப்பாளர்கள் சார்பில் கொடுக்க வேண்டிய மீதி பணம் கொடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
PTS Hunger strike 2
இது ஒரு புறம் இருக்க, புலி தயாரிப்பாளர்களான PTS மற்றும் ஷிபு தமீம் இருவரும் நடிகர் விஜய்யை சந்தித்து, தங்களுக்கு புலி படத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று புலம்பியுள்ளனர். அத்தோடு விட்டிருந்தா பரவாயில்லை, அவரிடமே நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். விஜய்யும் PTS வார்த்தைகளை நம்பி ஐந்து கோடி ருபாய் திருப்பி தந்துள்ளார். விஜய் அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் அப்படி நம்ப மாட்டார். PTS, விஜய்யுடைய PRO, மானேஜர் மற்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள அணைத்து வேலைகளையும் செய்யக்கூடிய ஒரு நம்பிக்கை மனிதராக அந்த வீட்டில் அப்போது வரை இருந்தவர் தான் இவர். இந்த நம்பிக்கையை பதித்த PTS, விஜய்க்கு துரோகம் செய்வதாக பலர் விஜய்யிடம் காதில் ஓதியுள்ளனர். ஆரம்பத்தில் PTS மீதான புகார்களை கண்டுக்கொள்ளாத விஜய், பின்னர் சில புகார்களை சந்தேகத்தின் பெயரில் விசாரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அத்தகைய விசாரணையில், சில உண்மை என விஜய் புரிந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. நடிகர் விஜய்க்கு PTS மீது இருந்த சிறு சந்தேகங்கள், புலி வெளியீட்டுக்கு பிறகு உண்மை என தெரிந்து கொண்டாரோ என்னவோ, PTS யை அவருடைய PRO மற்றும் மானேஜர் பொறுப்பிலிருந்து வெளியேற்றினார் விஜய்.

இது ஒரு புறம் இருக்க, புலி படம் வெளியீட்டுக்கு முன் நாள் விஜய் வீடு, அலுவலகம், PTSன் சென்னை மட்டும் அஞ்சி கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் அவருடைய அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் இவருடைய இடங்களில் இருந்தும் பல கோடி ருபாய் மதிப்புள்ள ஆவணங்களும் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அப்போது சொல்லப்பட்டது. இந்த ரெயிடுக்கான முழு ஏற்பாடும் PTS தான் செய்துள்ளார் என விஜய்யின் நல விரும்பிகள் பலர் விஜய்யிடம் போட்டு கொடுத்துள்ளதாக கேள்வி. அது மட்டுமின்றி, தாயாரிப்பாளர்கள் சங்கத்தில் PTS மீது உள்ள கடன் புகார்கள் பற்றி விசாரணை மேற்கொண்டபோது PTS நடிகர் விஜய்யை கேவலமாக பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

புலி படம் நஷ்டம் என PTS, மாற்றம் ஷிபு தமீம் விஜய்யிடம் கூறி ஐந்து கோடி ருபாய் வாங்கியுள்ளனர். வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு PTS பணம் பறிபோனது. இப்படி இருக்கும் பொது PTS எப்பிடி மூன்று படங்கள் தயாரிக்கிறார் என விஜய் நலவிரும்பிகள் விஜய்யிடம் போட்டு கொடுக்க, விஜய் உஷாரானார். அதன் காரணமாக தான், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக வெச்சாறு “போக்கிரி ராஜா படத்திற்கு ரெட் கார்டு” என்ற செக். தனக்கு PTS பத்து கோடி ருபாய் பணம் கொடுக்க வேண்டும் என்பது விஜய்யின் புகார். தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக PTS மற்றும் ஷிபு தமீமை அழைத்து விசாரித்தனர். பஞ்சாயத்து பேசப்பட்டு பத்து கோடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஐந்து கோடி, இறுதியாக மூன்று கோடி என முடிவு செய்யப்பட்டு இரு தயாரிப்பாளர்களும் தலா 1.5 கோடி கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திரைக்கு வந்த “போக்கிரி ராஜா” திரைப்படமும் ஷாத் ஷாத் PTS தயாரிப்பு தான். படம் ரிலீசுக்கு முன்னரே பல பிரச்சனை. “புலி” படத்தில் நஷ்டம் அடைந்த விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர் PTS நஷ்ட ஈடு கொடுக்காமல் அல்வா கொடுத்துக்கொண்டு வந்தார். சும்மாவா இருப்பாங்க விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள். “போக்கிரி ராஜா” திரைப்பட வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்பே அவர்கள் PTSயிடம் நஷ்டஈடு கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்கள். PTS தன்னுடைய ஆஸ் யூஷுவல் ஸ்டைலில் அவர்களுக்கு பேச்சால் அல்வா கொடுக்க பார்த்தார்! ஆனால் அங்கு அவருடைய பாச்சா பலிக்கவில்லை, விநியோகஸ்தர்களும் சரி திரையரங்க உரிமையாளர்களும் சரி ஒரு குறிப்பிட்ட அளவு நஷ்டஈடு பெற்று கொண்ட பிறகே “போக்கிரி ராஜா” படத்தை வெளியிட பச்சை கோடி காட்டினார்கள். சரி படம் தான் வெளியாகிடுச்சே! இனி லாபம் தான்!! என கணக்கு போட்ட PTSக்கு பெருத்த ஏமாற்றமே. “போக்கிரி ராஜா” படம் தோல்வி, கடன்காரர்களின் அடுத்த ரவுண்ட் நச்சரிப்பு தொடங்கியாச்சு. இந்த கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க அவர் வகுத்த ப்ளான் தான் இந்த “உண்ணாவிரத போராட்டம்”.

காலை ஆரம்பித்த இந்த போராட்டத்தில் பகல் 12:00 மணியளவில் சுமார் 10 நபர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் ஊடகவியாளர்கள் சுமார் 30 பேருக்கும் மேலாக இருந்தனர். காரணம், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பான் முகம் கொண்ட T.ராஜேந்தர் வருகிறார் என்று PTS சொன்ன பொய்யை நம்பித்தான். ஆனால் TR அங்கு நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க்கவில்லை என்பது தான் நிதர்சனம். உண்ணாவிரத போராட்டத்தில் அவ்வப்போது சில தயாரிப்பாளர்கள் வந்து தலை காட்டிவிட்டு சென்றுள்ளனர். அந்த லிஸ்டில் தயாரிப்பாளர்கள் Al.அழகப்பன், T.P.கஜேந்திரன், சிங்காரவேலன் அடங்குவர்.

நடந்ததை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், கடன்காரர்களை திசை திருப்புவதற்கான முயற்சியே தயாரிப்பாளர் P.T.செல்வகுமார் ஏற்பாடு செய்த இந்த தயாரிப்பாளர்களின் உண்ணாவிரத போராட்டம்.

உங்களை நம்பி தயாரிப்பாளர்கள் வருவார்களா என்பது உங்களுக்கே தெரியாதா மிஸ்டர் PTS?

யாருமே இல்லாத டீக்கடையில யாருக்கு தான் டீ ஆத்துனீங்க??

இது உங்களுக்கு தேவையா???

Leave a Response