“காதலும் கடந்து போகும்” திரைப்பட விமர்சனம்:

KA KA PO Review
நடிகர்கள்: கதிராக விஜய் சேதுபதி, யாழினியாக மடோனா செபஸ்டின், காவல்துறை அதிகாரியாக் இயக்குனர் சமுத்திரகனி, G.M.சுந்தர், D.R.K.கிரண், K.S.G.வெங்கடேஷ், ரிந்து, ரயில் ரவி மற்றும் மணிகண்டன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: பாடல்களை தாமரை, மோகன்ராஜன் மற்றும் விவேக் வேல்முருகன் எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் செய்துள்ளார். ஒரிஜினல் கொரியன் படமான “My Dear Desperado” படத்தின் தழுவல் தான் இந்த படம். அப்படத்தின் கதையை Kim Kwang-sik என்பவர் எழுதியுள்ளார். அந்த கதையின் தழுவலை ஏற்று திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் நலன் குமாரசாமி. C.V.குமார் மற்றும் K.E.ஞானவேல்ராஜா இனைந்து தயாரித்துள்ளனர்.

“காதலும் கடந்து போகும்”- சமீபத்தில் டிரைலர்களை பார்த்து, மச்சான், ஹாய் படி, இந்த படம் செம யா இருக்கும் போலிருக்கு என்று பாராட்டு பெற்ற “கா க போ”- படம் அந்த பாராட்டை தக்கவைத்த படமாகிறது. “கதிர்” என்ற ரௌடி, அடியாள், அடிவாங்குற இப்படி ஹீரோவை என்ன சொல்லி பாராட்ட அப்படி ஒரு நடிப்பு, விஜய் சேதுபதிக்கு அவர் குரல் ப்ளஸ், பல காட்சிகளில் கைதட்டல் வாங்குகிறார். வசனங்கள் நச், யதார்த்தமாக செமத்தியா சிரிப்பை வரவழைக்கின்றன.

கதை: ஒரு குடியிருப்பு, எதிரெதிர் வீட்டில் ஹீரோ ஹீரோயின். அசட்டு துணிச்சல், அதிக பயத்துடன் “யாழினி”-(டயானா) இருவரும் பழக வேண்டிய கட்டாயத்தில் என்ன நிகழ்கிறது. பழகிய காரணத்தால் நிகழ்ந்த கதையே படம். பல படங்களில் பார்த்த சில காட்சிகள் வந்தாலும் மறக்கிற அளவு திரைக்கதையில் சுவாரஸ்யத்தை தந்து “கா க போ” படத்தை மனசுல அசைபோட வைத்த டைரக்டரின் திறமையை பாராட்டவேண்டும். யாழினி’க்கு வேலை கிடைக்க கதிர் செய்யும்(கோட் சூட் போட்டு கையில் வாட்ச்சை கட்டியதும்) பர பர நிமிடங்கள். படத்தை பார்க்கலாம், ரசிக்கலாம்.

“கா க போ” படத்தில் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி உடையில் ரௌடிகளின் தலைவனாக வரும் G M சுந்தர் (சத்யா படத்தில் மிக மிக முக்கிய கேரக்டரில் நடித்தவர்) மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார். கிரண் வழக்கம் போல் மெயின் ரௌடி, இயக்குனர் சமுத்திரகனி எந்த கேரக்டரில் வந்தாலும் தனியாக ஜொலிக்கிறார். யாழினி கூறும் எக்ஸிமோக்கள் + நாய், கதை, பிறகு கதிர் “நாய் கூட படுத்தவளே” என்று பதிலுக்கு சத்தமாக கூறுவது, இப்படி பல காட்சிகள், வசனங்கள் இளசுகளை இழுக்கும்.

குற்றம் செய்யாமல் சரண்டர் ஆகி, ஜெயிலில் தண்டனை முடிந்து வருகிறார் கதிர். தான் வந்த பிறகு, கதிர் தான் பட்ட வலியை இன்னொரு இளைஞன் படவேண்டாம் என்று அவனை அடித்து விரட்டும் காட்சியில் இயக்குனர், கதிர் கேரக்டர் வழியே பலருக்கு பாடம் எடுத்துள்ளதை, கூறிய நற்செயலை பாராட்ட வேண்டும். கதாநாயகி மடோனா செபஸ்டின் நல்ல தேர்வு. அந்த அபார்ட்மென்ட் வழியில் “குனிந்து செல்லவும்” என்ற வரி(பலருக்கு நிஜத்தை அவங்கவங்க வசிக்குபினத்தை ஞாபகப்படுத்தவைக்கும்) அருமை.

கதை சற்று மெல்லமாக பயணித்தாலும், விஜய் சேதுபதியின் எதார்த்த நடிப்பும், மடோனா செபஸ்டின் கதாபாத்திரமும் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.

விமர்சனம்: பூரி ஜெகன்.

Leave a Response