“நட்பதிகாரம் 79” திரைப்பட விமர்சனம்:

Natpadhigaram Review
நடிகர்கள்: ஜீவாவாக ராஜ்பரத், அரவிந்தாக அம்ஜத் கான், மஹாவாக ரேஷ்மி மேனன், பூஜாவாக தேஜஸ்வி மற்றும் M.S.பாஸ்கர், சுப்பு பஞ்சு மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: படத்தொகுப்பை V.J.சாபு ஜோசப் மேற்கொள்ள, R.B.குருதேவ் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். இசையை தீபக் நிலாம்பூர் அமைக்க ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜெயம் சினி என்டர்டைன்மென்ட் சார்பாக D.ரவிகுமார் தயாரித்துள்ளார்.

“நட்பதிகாரம்”- -79″ – இரண்டு காதல், ஒரு காதலன் கோடீஸ்வரன், காதலி மிடில்கிளாஸ். இனலனொரு காதலி கோடீஸ்வரி, காதலன் மிடில்கிளாஸ், சரியான வேலை கிடைக்காமல் நண்பர்களுடன் ஜாலியாக வாழ்பவன்.
இவங்க நண்பர்களாக நட்பு வட்டத்தில் வந்த பிறகு என்ன நிகழ்கிறது என்பதே கதை. ராஜ்பரத்-தேஜஸ்வி ஜோடி மற்றும் அம்ஜத்கான்-ரேஷ்மி மேனன் ஜோடி, இரண்டு ஜோடிகளுமே சிறந்த தேர்வு.

பார்த்த உடனே காதல் வந்து ஜீவாவை தேடி வரும் பூஜா செம தில். கார் நம்பரை வைத்து, அட்ரஸை அறிந்து பூஜாவை தேடி வரும் ஜீவா, ஒரு துள்ளலான பகுதி. அமைதியாகவே இருக்கும் மகா ஆர்ப்பட்டமே ஸ்டைலாக கொண்ட அரவிந்த் என நால்வரும் நட்புடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கொண்டு போகும் போது ஏற்படும் ஒரு நிகழ்வு, நால்வரும் பிரிகின்றனர். உண்மையை அறிந்து மீண்டும் இணையும் காட்சி “சுபம்”.

ஒளிப்பதிவு பளிச்சென ஒளிர்கிறது. பாடல்களுக்கான இசை மட்டுமின்றி பின்னணி இசையிலும் சரியாக இசையினை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் தீபக் நிலம்பூர். “சொல்லு சொல்லு” பாடலில் ராஜூசுந்தரம் மற்றும் ஸ்ரீதர் இருவரும் துள்ளல் ஆட்டம் போட்டு ஜமாய்த்துவிட்டனர். “தோழா தோழா”- பாடல் பிரமாதம். அனைவரும் பார்த்து மகிழ, முதல் படத்தை தயாரிப்பாளர் திரு.D.ரவிக்குமார் அவர்கள் சிறப்பாக வழங்கியுள்ளார். இயக்குனர் ரவிச்சந்திரன் காதல், காதலர்களின் மனசை கவிதைபோல இனிமையாக வழங்கி நட்பையும் சிறப்பித்துள்ளார்.

விமர்சனம்: பூரி ஜெகன்.

Leave a Response