“ஜில் ஜங் ஜக்” திரைப்பட விமர்சனம்:

Jil Jung Juk Review
நடிகர்கள்: சித்தார்த், ராதாரவி, நாசர், அவினாஷ் ரக்ஹுதேவன், சனந்த், அமரேந்திரன், சாய் தீனா, பகவதி பெருமாள், நாகா, பிபின், ஷரத் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்: இயக்கம்: தீரஜ் வைத்தி, ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை: vishal சந்திரசேகர், படத்தொகுப்பு: குருட்ஸ் ஸ்னைடர், எழுது: மோகன் ராமகிருஷ்ணன், தீரஜ் வைத்தி, சண்டை பயிற்சி: சக்தி சரவணன், தயாரிப்பு: ஏடாகி எண்டர்டைன்மேன்ட் சார்பாக சித்தார்த்.

கதை:
ஜில் ஜங் ஜக்,,—; சித்தார்த்– துணிச்சலை பாராட்ட ஒரு படம். ஆனால் அதே பழைய கதை.போதை பொருள் (விலை மதிப்பில்லாத?)- போதை வஸ்துவை காராக மாற்றி மூன்று இளைஞர்களின்(படம் பெயர் கொண்ட மூவர்) உதவியால் கடத்துவது வழியில் வரும் சம்பவங்கள்… அப்பாவியான இருவர் தவறால் என்ன ஆகிறது? அதிலிருந்து மூன்றாம் நபர்.ஜக்’கின் அசட்டு துணிச்சலால்..( லக்)— தெய்வாவிடமிருந்து தப்பித்தனரா,? என்பதே மீதி கதை. 2020’ல் கதை நிகழ்கிறது என்பதற்க்காகவாவது இன்னமும் சிறப்பாக திரைக்கதையை வைத்திருக்கலாம்.

ஒரு இடத்தில் செம கிளாப்ஸ் வரும், “அஜீத்” பேனரை காட்டுவதால், அடுத்து ஒரே காட்சியில் கிளாப்ஸ் வரும் சீரிஸான நேரத்தில் ஜில் ஜங் எரி கோலி விளையாடி அதனால் ஏற்படும் காமெடி சண்டை காட்சி. ஆக படம் கடும் முயற்சி செய்து பொம்மை கதையை தந்துட்டாங்க.

ஜில் ஜங் ஜக்/ ராதாரவி கேரக்டர் பெயர் தெய்வா, முக்கியமாக பை, மருந்து, அட்டாக் போன்ற வித்தியாச பெயர்களுக்கு பாராட்டலாம். ஷூட்டிங் விபத்தில் சிக்கிய போதை வஸ்து உள்ள கார் என்ன ஆனது?…விளக்கமில்லை. 2020-ல் இப்படி முன்று அப்பாவி திருடர்களா? இப்படி பல கேள்விகள் மனசுல வருவதை தடுக்கமுடியாது.

படத்தின் ஆரம்பத்தில் சித்தார்த்தும் அவருடைய தந்தையாக வரும் நாசரின் சீட்டாட்ட அலும்பல் கொஞ்சம் நேரம் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது.

ஜில் ஜங் ஜக்– பெயரில் புதுமை– காட்சிகளில் புதுமை..- திரைக்கதையில் அதே ,அதே பழைய பார்முலா….

A சென்டர்களில் 50 நபர்கள் பார்க்கலாம், B C செனலடர்களில்—–????

விமர்சகர்: பூரி ஜகன்.

Leave a Response