“வில் அம்பு” திரைப்பட விமர்சனம்:

Vil Ambu Review
நடிகர்கள்: ஸ்ரீ, ஹரிஷ் கல்யான், சிருஷ்டி டாங்கே, சம்ஸ்க்ரிதி ஷெனாய், சாந்தினி, ஹரிஷ் உத்தமன், நந்தகுமார், சைவம் கலா, யோகி பாபு, பைவ்ஸ்டார் கல்யான் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: கதை, திரைகதை & இயக்கம்: ரமேஷ் சுப்ரமணியம், ஒளிப்பதிவு: மார்டின் ஜோ, இசை: நவீன், பாடல்கள்: மதன் கார்கி, ஏகாதேசி, விஜயசாஹர், படத்தொகுப்பு: ரூபன், சண்டை பயிற்சி: மாஸ்டர் மகேஷ், தயாரிப்பு: ஸ்டார் பிலிம் லான்ட் மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ்.

கதை:
வில்– அம்பு— முன்னுரையில் கதை கூறி புரிய வைத்த டைரக்டர் அந்த புரிதலை படம் முடியும் வரை கொண்டு வந்து கலக்கியிருந்தார். பிரமாதமான திரைக்கதை..

மகனை தன் விருப்பம் போல ஆளாக்க ஒரு தந்தை. மகன் சின்ன வயசுல காதில் கேட்டதை பேசியதால் அவனை செல்லமாக வளர்த்து எதுவும் கேட்காமல் அவனை கவனிக்காமல் வளர்க்கும் ஒரு பெற்றோர் என பாடம் சொல்ல இந்த படம் தந்துள்ளார். சின்ன வயசுல சிறுவனை சிறுமி அழகை கூறி பாராட்டுவதும் அந்த சிறுமி கன்னியாக வளர்ந்து அதே சிறுவன் இளைஞனாக பிறகு அவனையே ஒரு தலையாக காதலிப்பது நெருடலை தருகிறது. அவன் வாழ்வு நலமாக மாற அவள் தக்க நேரத்தில் உதவிடுவது சூப்பர் (ஹரிஷ்+ சாந்தினி)- ஜோடி கதை.

அடுத்து ஸ்ரீ+ சம்ஸ்க்ரிதி கதை..பள்ளி மாணவி???
(இன்னும் எத்தனை படங்களில் ரௌடியை காதலிப்பது போல காட்டுவார்களோ)!- ஸ்ரீ- துணிச்சலால் கண்டதும் காதல்.- வழக்கமான எதிர்ப்பு – மேஜராக 10 நாட்கள் என்று போக அவங்க என்ன ஆனாங்க? மீதி கதை. ஸ்ரீ நண்பர்களாக வரும் இருவரில், ஒரு நண்பர் நகைச்சுவையில் ரணகளமாக்கி சிரிக்கவைப்பதை பாராட்டலாம். என்ன ஆகும் என்ற திகு திகு சஸ்பென்ஸ் நீரில் ஓகே. ஹீரோ, காதல், உடனே ஒரு வீதி பாடல் ஆடல் குறிப்பாக லுங்கியை மடித்து ஆடுவது. “ஆடுகளம்”- படத்தை இன்னுமா இவங்க மறக்கல?-

வில் அம்பு– நிகழ்வுகள் வில்லாக, எய்த அம்பு விதியாக. இரு இளைஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள்.

வில் அம்பு ஆவரேஜ் வசூல் உறுதி..

விமர்சகர்: பூரி ஜகன்.

Leave a Response