பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் படத்தின் டைட்டில் வெளியிடமால் ரகசியம் காத்து வருகின்றார் பிரபு சாலமன். அனேகமாக படத்தின் பெயர் ரயில் என வைக்கப்படலாம் என படப்பிடிப்பு வட்டராங்களில் கருத்து நிலவுகின்றது. படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், பூஜா சவேரி, கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமையா, ராதா ரவி, ஆர்வி உதயகுமார், கருணாகரன், பிரேம், போஸ் வெங்கட், ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா, அணு மோகன், படவா கோபி, கும்கி அஷ்வின், தர்புக சிவா, ஹரிஷ் உத்தமன், இமான் அண்ணாச்சி, ஏ வெங்கடேஷ், சின்னி ஜெயந்த், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிபதிவு வெற்றிவேல் மகேந்திரன். எடிட்டிங் எல்விகே தாஸ். வைரபாலன் ஆர்ட் ஒர்க் செய்துள்ளார். சிவா ஸ்டான்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். யுகபாரதியின் வரிகளில் பாடல்கள் உருவாகியுள்ளது.