மாலை நேரத்து மயக்கம் திரைவிமர்சனம் – புதிய தலைமுறையினரை மயக்கும் மாலை..!

maalai nerathu mayakkam

செல்வராகவன் படங்கள் வெளிவரும் பொழுது பேசப்படுவதை விட, வெளிவந்து பல நாட்களுக்கு பிறகு அதைப் பற்றி ஆஹா ஓகோ எனப் பேசுபவர்கள் அதிகம். துள்ளுவதோ இளமை படத்தில் துவங்கி காதல் கொண்டேன், 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன வரை அனைத்துமே செல்வராகவனுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவை. இதில் இரண்டாம் உலகம் மட்டும் ஏனோ ஒரு விதிவிலக்கு. இன்று பிட்டு படம் எனக் கூறப்படும் ‘த்ரிஷா இல்லினா நயன்தாரா’ படம் போல் அன்றே ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுத்தவர் செல்வராகவன். படங்களில் கெட்டவார்த்தைகள் பேசுவது ஆரோக்கியமா என்று விவாதிப்பதை விட, அது தமிழ் சினிமாவை வரும் காலங்களில் ஆக்கிரமிக்கும் என்பதே உண்மை. இன்றைய இளைஞர்கள் அதுபோன்ற படங்களை பார்பதற்கு தயாராகிவிட்டனர்.

பொதுவாக செல்வராகவன் படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள். அடுத்த தலைமுறையினரை கவரக் கூடியவை. அதேவேளை ஏற்கனவே உள்ள தலைமுறையினர் ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள ‘மாலை நேரத்து மயக்கம்’ படமும் அப்படி தான். படத்தில் இருக்கும் காட்சிகள் ஆண்டாண்டு காலமாக பல குடும்பங்களில் பூகம்பமாக வெடிக்கும் பிரச்சனை தான். ஆனால் அதை திரையில் காட்டியவிதம் தான் இந்தப்படம் செக்ஸ் தான் சந்தோசம் என நினைக்கும் கணவன் அல்லது மனைவி இருவருக்கு புரிதல் எங்கு விடுபட்டு போகிறது என்பதை பற்றியது தான் இந்த படத்தின் கதை. செல்வராகவன் இயக்கினால் எப்படி இருக்குமோ அதேபோல் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார் அவரது மனைவி கீதாஞ்சலி.

படத்தில் வரும் ஹீரோ செல்வராகவன் சாயலிலும், ஹீரோயின் சோனியா அகர்வாலின் சாயலிலும் உள்ளனர். மேலும் படத்தில் வரும் காட்சிகளும், செல்வா சோனியா வாழ்வில் நடந்த சம்பவங்களும் நிறையவே ஒத்துப்போகின்றது. ஒருவேளை இது அவர்களின் ஒரிஜினல் வாழ்வில் நடந்த கதையாக கூட இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் ரகம் அல்ல. இது வருங்கால தலைமுறையினர் ரசிக்கும் ரகம். கதாநாயகி வாமிஃகா கப்பிக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது. இந்த வருட துவக்கம் ஒரு சிறப்பான படத்துடன் ஆரம்பமாகியுள்ளது எனக்கூறலாம்.

மொத்தத்தில் இந்த படம் புதிய தலைமுறையினரை மயக்கும் மாலை..!

Leave a Response