கரையோரம் திரைவிமர்சனம் – நிகிஷா படேலின் கிளாமர், சிம்ரன் என்ட்ரி வேஸ்டா போச்சே!

karaiyoram review

கரையோரம் படம் பற்றி கூற ஒன்றுமே இல்லை. ஒரு அரைத்த பழைய கதை. சமீபத்தில் கூட இது போன்ற கதைகள் வந்து விட்டன. கரையோரம் படத்தில் நிகிஷா படேல் கவர்ச்சி தான் இருக்கு, படத்துல எதுவும் இல்லை. நல்ல குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிகிஷா படேல். ஆனால் படம் முழுவதும் கிளாமரை வாரி வழங்குகின்றார். இனியாவுக்கு காதலனுடன் சேர்ந்து ஏமாற்றும் கதாபாத்திரத்தை தவிர வேறு வாய்ப்புகள் வருவதில்லை போல. தொடர்ந்து ஒரே கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகின்றார். ஐ படத்தில் வரும் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ என்ற பாட்டில் வரும் ஒரு பீட்டை உருவி படம் முழுக்க தீம் மியூசிக்காக பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர். உருவுறது தான் உருவுறீங்க ஹாலிவுட் படத்துல இருந்து உருவுனீங்கனா பெரிய மியூசிக் டைரக்டர் ஆகலாம்ல?

படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் என்ட்ரி ஆகும் சிம்ரன், ரவுடிகளை நொறுக்கி உள்ளார். படத்தில் உருப்புடியாக உள்ள விஷயம் அது மட்டும் தான். நீண்ட நாட்களுக்கு பின் சிம்ரன் நடிக்க வந்தாலும், அழகு குறையாமல் அப்படியே தான் உள்ளார்.

மொத்தத்தில் நிகிஷா படேலின் கிளாமரும் சிம்ரனின் என்ட்ரி ரெண்டுமே வேஸ்டா போச்சு..!

-Satheesh Srini

Leave a Response