மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய “தமிழர் விடியல் கட்சி”:

இந்திய அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து பல மக்கள் விரோத திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகள், அனல் மின் நிலையங்கள், நியூட்ரினோ திட்டம் என பல அழிவு திட்டங்கள், வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தை முற்றுகையிடுகின்றன. காவேரி டெல்டா மாவட்டங்களை அழித்து மீத்தேன் வாயுவும், நிலக்கரி எடுக்கும் “மீத்தேன் திட்டமும்” அப்படியானதொரு அழிவு திட்டமே.

நீர், நிலம், காற்று என ஒட்டுமொத்த உயிர் சூழலையும் அழித்து வரக்கூடிய இத்திட்டம் தமிழர்களுக்கு பேராபத்தை உண்டு பண்ண காத்திருக்கிறது. உலகம் முழுக்க மீத்தேன் எடுக்கும் திட்டங்களை எதிர்த்து அந்தந்த நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். பல நாடுகளில் அரசுகள் பணிந்த நிலையில் இருக்கின்றன. ஆனால் இந்திய அரசு தமிழர்கள் மீது வஞ்சம் கொண்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை டெல்டா மாவட்டங்களை அழிக்க இத்திட்டத்தை கொண்டு வருகிறது. இந்த அரசு பெருமுதலாளிகளுக்கானதாக இருக்கிறது, மக்கள் விரோத அரசாக இருக்கிறது. இவ்வாறு, ஆர்ப்டத்தின் போது அக்கட்சி அளித்த பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அரசை எதிர்கொண்டு மீத்தேன் திட்டத்தை தடுக்கும் பொறுப்பு தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் உண்டு. அந்த வகையில் காவேரி டெல்டா மாவட்டங்களை காக்க தோழமை இயக்கங்களையும், மக்களையும் திரட்டி “தமிழர் விடியல் கட்சி” இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை 09 மார்ச் 2015 அன்று தஞ்சையில் நடத்தியது. இந்த ஆர்பாட்டத்தில் தங்கள் கட்சியின் தோழமை இயக்கங்களான தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, மே பதினேழு இயக்கம், பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் ஆகியவை பங்குபெற்றனர்.

Leave a Response