‘தாரை தப்பட்டை’க்காக அந்தமான் பறக்கிறார் பாலா..!

சசிகுமார், வரலட்சுமி காம்பினேசனில் பாலா இயக்கிவரும் படம் தான் ‘தாரை தப்பட்டை’ சசிகுமார் நாதஸ்வர கலைஞராகவும் வரலட்சுமி கரகட்டாக்காரியாகவும் நடிக்கும் இந்தப்படத்திற்காக 12 பாடல்களை போட்டுத்தந்திருக்கிறார் இளையராஜா.

இந்தப் படம் கிட்டத்தட்ட 75 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டது. இன்னும் சில முக்கியமான காட்சிகளை அந்தமான் தீவுகளில் படமாக்க இருப்பதால் தனது டீமுடன் அங்கே புறப்பட இருக்கிறார் பாலா.. பாலாவின் படம் ஒன்று கடல் தாண்டி படபிடிப்பு நடத்தப்போவது இதுதான் முதன்முறையாகும்.