கதை திருட்டுக்கு எதிராக குரல் கொடுக்கும் ‘பெருச்சாழி’ இயக்குனர்..!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு இயக்குனரின் படம் வெளியாகி வெற்றி பெறும்போது, சில சமயங்களில் இந்தப்படத்தின் கதை என்னுடையது. இதை அந்த இயக்குனர் திருடிவிட்டார்.. எனக்கு நியாயம் வேண்டும் என பல கதாசிரியர்கள், உதவி இயக்குனர்கள் கோர்ட் படியேறுவதுண்டு. இதில் எந்த தரப்பினர் பக்கம் உண்மை இருக்கும் என ரசிகர்கள் குழம்பிப்போவதும் உண்டு.

அப்படித்தான் ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்றும் அந்த கதையை முருகதாஸ் திருடி விட்டதாகவும் மீஞ்சூர் கோபி என்பவர் வழக்கு தொடுத்தார். தற்போது ‘கருப்பர் நகரம்’ என்கிற படத்தை இயக்கி வருபவர் இவர்தான். ‘மெட்ராஸ்’ படத்தின் கதையும் பல காட்சிகளும் தன்னுடையது என அந்தப்படத்தின் இயக்குனர் மீது புகார் வாசித்தவரும் இவரே தான்.

இது குறித்து அவர் கூறுகையில் ‘ கத்தி’ படத்தின் கதையை நான் தான் முதலில் முருகதாஸிடம் சொன்னேன். கதை அவருக்கு பிடிக்க, நானே தயாரிக்கிறேன் என்றார். பிறகு தன்னை தவிர்த்துவிட்டதாகவும் தற்போது வெளியாகியுள்ள கத்தி படத்தை பார்த்தபோது அது தன்னுடைய கதை தான் என்பது உறுதியாகியுள்ளதாகவும் புகார் கூறியுள்ளார்.

இந்த கதை திருட்டை ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ மற்றும் சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லாலின் நடிப்பில் வெளியான ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் கடுமையாக எதிர்த்துள்ளார். அதேசமயம் ஒரு கதாசிரியரோ, உதவி இயக்குனரோ தனது கதையை ஒரு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் அனுப்பும்போது ஈமெயில் மூலமாக அனுப்பவேண்டும் என்றும் அதுதான் அவருக்கு சரியான ஆதாரம் என்றும் கதை திருட்டை தவிர்க்க வழிமுறைகளை கூறியுள்ளார்.

Arun Vaidyanathan FB Page