சுனாமி நினைவு தினத்துக்கு முதல் நாள் ‘கயல்’ ரிலீஸ்..!

“டிசம்பர் 26 அன்று உலகம் ஒரு சோகத்தை சந்தித்தது. அதற்கு முன் தினம் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சந்தோஷம் கூட நிலைக்காமல் பலரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.. அதிலும் கடலோர மாவட்டங்கள் தான் அதிகம் பாதித்தது. அதில் எவ்வளவோ பேர் சொத்து, உறவுகள், உடமைகளை இழந்தார்கள் அதில் தொலைந்து போன ஒரு காதல் தான் ‘கயல்” என்கிறார் பிரபு சாலமன்.

இப்போது விஷயம் என்னவென்றால் சுனாமி நினைவு தினத்துக்கு முதல் நாளான கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘கயல்’ படத்தை சென்டிமென்ட்டாக ரிலீஸ் செய்கிறார் பிரபு சாலமன். சென்டிமென்ட் ஒரு பக்கம் இருந்தாலும் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் என தொடர் விடுமுறையாக இருப்பதால் கயலுக்கு பலத்த வரவேற்பு கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.