பிரபுதேவாவை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரும் இப்போது ‘போக்கிரி மன்னன்’ படத்தின் மூலம் ஹீரோவாக மாறியுள்ளார். ஆனால் இவரது ஆசை டைரக்ஷன் தான் என்றாலும், நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்ததால் முதலில் அதை பிடித்துக்கொண்டுள்ளார். இருந்தாலும் எதிர்காலத்தில் டைரக்ஷனும் பண்ணுவாராம்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டு பேசினார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. விழாவில் இயக்குனர் ராஜ்கபூர், நடிகர்கள் சாந்தனு, கருணாஸ், ஸ்ரீமன், ‘மேகா’ அஸ்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ராகவ் மாதேஷ் என்பவர் இயக்கியுள்ள, இந்தப்படத்திற்கு இந்திரவர்மன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை பெங்களூரை சேர்ந்த ரமேஷ் ரெட்டி என்பவர் தயாரித்துள்ளார். கன்னடத்திலிருந்து வந்திருக்கும் இவர் பேசும்போது, “எனது முதல் படமான இந்த போக்கிரி மன்னனை நீங்கள் தான் வெற்றிபெற வைக்க வேண்டும்” என உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.