துரோகி இயக்குனரின் படத்தில் நடிக்கும் மாதவன்..!

‘வேட்டை’ படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ‘வேட்டை’யாடிய மாதவன் இப்போது ‘இறுதிச்சுற்று’க்காக தயாராகி வருகிறார். அப்படி என்றால் மாதவன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விளையாட்டு வீரர் ஆகிவிட்டாரா என கலங்கவேண்டாம்.

இப்போது தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகவிருக்கும் ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் மாதவன். தமிழில் ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா கொங்காரா தான் இந்தப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சஷிகாந்த்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம், சி..வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது.

இந்தப்படத்தில் மாதவனுக்கு பாக்ஸர் கேரக்டர். அதனால் இதற்காக கடந்த பல மாதங்களாக லாஸ் ஏஞ்சல்ஸில் ஆண்டனி, அலெக்ஸாண்டர் என இரண்டு வீரர்களிடம் குத்துச்சண்டை பயிற்சி எடுத்திருக்கிறார் மாதவன். அத்துடன் ரஷ்யா, செர்பியா, மஸ்கோ, தோகா, கோலாலம்பூர், சிங்கப்பூர், குவைத் என இதற்காக ஒரு டூர் அடித்துவிட்டு வந்திருக்கிறார்