ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்கிறார் இயக்குனர் பாலா..!

பாலாவின் படங்களுக்கான டைட்டில்கள் எப்போதுமே வசீகரமானவை.. கவனம் ஈர்க்க கூடியவை. இப்போதும் அப்படித்தான்.. சசிகுமாரை வைத்து தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என பெயர்வைத்து வழக்கம்போல வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தப்படத்திற்கான பூஜையையும் தனது தயாரிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜையையும் சமீபத்தில் நடத்தி படங்களை துவங்கியுள்ளார் பாலா. ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’ படத்தை பாலா தயாரித்து வருவதும் நமக்கு தெரிந்தது தானே..

பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’யில் சசிகுமார், வரலட்சுமியும் சற்குணம் இயக்கும் படத்தில் அதர்வாவும் ‘கயல்’ ஆனந்தியும் நடிக்கிறார்கள். ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசைஞானி இசையமைக்கிறார் என்பதும், இது அவர் இசையமைக்கும் 1000வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.