ஒரு இயக்குனருக்கு மிக முக்கியமான வலதுகை என்றால் அது அவரது படத்தொகுப்பாளர் தான்.. அந்த வகையில் வெங்கட்பிரபுவால் ‘சென்னை-28’ படத்தில் படத்தொகுப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டு அவருடன் ‘சரோஜா’, ‘மங்காத்தா’ என அவரது அனைத்து படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் எடிட்டர் பிரவீண்.
சின்னத்திரையில் பாலுமகேந்திராவின் கதைநேரம் மூலம் படத்தொகுப்பாளராக தனது திறமையை வளர்த்துக்கொண்ட பிரவீண் ‘ஆரண்ய காண்டம்’ படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசியவிருதையும் பெற்றார்.
தற்போது கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ், வசந்தபாலனின் காவியத்தலைவன் ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ள பிரவீணுக்கு சூர்யாவை வைத்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள ‘மாஸ்’ படத்திற்கும் படத்தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பிரவீணின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக கோல்டன் ஜூப்ளி படத்தை தொட்டு சாதனை படைக்கிறார் பிரவீண்.