தமிழினப் படுகொலையின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது:

18-5-2014 ஞாயிறு மாலை 5 மணியளவில் தமிழர் கடற்கரை ( மெரினா ) கண்ணகி சிலை அருகில் தமிழினப் படுகொலையின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. நிகழ்வில் தோழர் வைகோ, தோழர் வேல்முருகன், தோழர் கோவை ராமகிருஷ்ணன், தோழர் மணியரசன், தோழர் கி.வே.பொன்னையன், ஓவியர் வீரசந்தானம், தோழர் பொழிலன், தோழர் கயல்விழி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சார்ந்த தலைவர்களும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்குபெற்று இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்தினர்.

நிகழ்வில் பறையிசை, பாடல்கள், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாவீரர்களின் நினைவாக நடுகல் அமைக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டது. பாலச்சந்திரன் உருவம் பதித்த பதாகை மணல் மேடையில் அமைக்கப்பட்டு மலர்கள் தூவியும் மெழுகுவத்தி ஏற்றியும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை, விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கவும் கோரிக்கை பதாகைகளோடு தமிழீழ தேசிய தலைவரின் படங்களை பொதுமக்கள் உயர்த்தி பிடித்து முழக்கங்கள் எழுப்பினர். நிகழ்வின் முடிவில் தோழர் திருமுருகன் தமிழீழ அரசு குறித்தும், விடுதலைப் புலிகளையும் தமிழீழ கோரிக்கையையும் அழிக்க நடந்த சர்வதேச சதிகள் பற்றியும், தமிழக வாழ்வாதார பிரச்சனைகள் பற்றியும் உரையாற்றினார்.
DSC09458

DSC09467

DSC09483

IMG_0496

IMG_6770

IMG_6893

IMG_6936