தயாரிப்பாளரிடம் 40 லட்சம் பண மோசடி : தம்பதி மீது வழக்கு பதிவு..!

சென்னை திருவெற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் உரிமையாளர்கள் சுசீலா இவரது கணவர் தவமணி. இவர்கள் அவர்களுடைய
தியேட்டர் தொழிலை மேம்படுத்த, ‘ஹர ஹர மஹாதேவி’ திரைப்பட தயாரிப்பாளர் தங்கராஜ் அவர்களை பங்குதாரராக இணைத்து கொண்டு படங்கள் வாங்கி வெளியிடும் தொழில் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு MSM தியேட்டரை சீரமைக்க 25 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் தங்கராஜிடம் கடனாக கேட்டிருக்கிறார் சுசீலா. இந்த கடனுக்காக ராயபுரத்தில் உள்ள சொத்தை அடமானமாக எழுதி கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகையை தனது வங்கியில் இருந்து தங்கராஜ் காசோலை மூலம் சுசீலாவுக்கு வழங்கி இருக்கிறார்.

கடன் வாங்கிய சில மாதங்களில் கணவன் மனைவியான சுசீலா-தவமணி தம்பதியின் வரவு செலவு கணக்குகளில் தவறு இருப்பது தெரிந்ததும் அவர்களோடு இணைந்து செய்து வந்த தொழிலில் இருந்து தங்கராஜ் விலகியிருக்கிறார்.

அதன் பின் ஏற்கனவே சொத்தை அடமானம் வைத்து வாங்கி சென்ற கடனை திருப்பி செலுத்தாமல் சுசீலா தவமணி தம்பதி ஏமாற்றி வந்திருக்கிறார்கள். வாங்கி கடனுக்கு வட்டியும் உயர இப்போது அந்த தொகை 40 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த சூழலில் ராயபுரத்தில் உள்ள அடமான சொத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய MSM தியேட்டர் உரிமையாளர் சுசீலா-தவமணி தம்பதி முயற்சியில் இறங்கியது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் தங்கராஜ் தான் மோசடி செய்யப்படுகிறோம் என உணர்ந்து உடனடியாக திருவெற்றியூர் போலீசில் MSM தியேட்டர் உரிமையாளர் சுசீலா-தவமணி தம்பதி மீது மோசடி புகார் கொடுத்தார்.

இந்த புகாரை விசாரணை செய்தபின் மோசடி புகாரில் உண்மை இருப்பது தெரிந்ததும் திருவெற்றியூர் MSM தியேட்டர் உரிமையாளர் சுசீலா-தவமணி தம்பதி மீது 40 லட்சம் மோசடி செய்ததற்காக வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தியேட்டர் அதிபர் அதிலும் பெண் தன் கணவரோடு இணைந்து மோசடியில் ஈடுபட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response