“நட்பே துணை” விமர்சனம் இதோ..!

ஹாக்கி கதைக் களமாகவும், ஒரு புறம் ஹாக்கி, மறுபுறம் தாங்கள் விளையாடும் மைதானத்தை கார்பரேட் நிறுவனத்திடம் இருந்து காப்பாற்ற கதையின் நாயகன் ஆதி தனது அணி நண்பர்களுடன் எப்படி எதிர் கொள்கிறார் என்பது தான் நட்பே துணை திரைப்படத்தின் கதை.

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து நிறுவனத்தை, காரைக்காலில் உள்ள ஒரு பழம்பெரும் ஹாக்கி விளையாட்டு மைதானத்தை அகற்றிவிட்டு அங்கு கட்டுவதற்காக முயற்சி செய்கிறது. அதற்கு விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் கரு.பழனியப்பன் துணை போகிறார். இந்த பிரச்னையிலிருந்து மைதானத்தை காப்பாற்ற ஆதி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்த ஹாக்கி அணி தேசிய அளவில் சாதிக்க வேண்டிய கட்டயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

தேசிய அளவில் சாதிக்கின்றனரா… இல்லையா?, மைதானம் காப்பாற்றப்படுகிறாதா, தவறான கார்பரேட் நிறுவனத்திற்கு துணை நிற்கும் அரசியல்வாதிக்கு எப்படி பாடம் புகட்டுகின்றனர் என்பது தான் படத்தின் மொத்த கதை.

விளையாட்டு துறை சம்பந்தமான கதையை தேர்ந்தெடுத்த போதே படம் பாதி வெற்றி பெற்று விட்டது. அதோடு நடிப்பு, இசை, நடனம் என பட நாயகன் ஆதி தன்னால் முடிந்த அனைத்தையும் சிறப்பாக முயற்சித்திருக்கிறார்.

இந்த படத்தின் வில்லனாக, அரசியல்வாதியாக வரும் கரு.பழனியப்பனின் டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என அனைத்தும் அரசியல்வாதியாகவும், வில்லனாகவும் நியாயப்படுத்தும் விதத்தில் சிறப்பாக உள்ளது. அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அரங்கை அதிர வைக்கும் விதமாக உள்ளது. ஹாக்கி அணி பயிற்சியாளராக வரும் ஹரீஸ் உத்தமன் தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

படத்தின் விறுவிறுப்பான காட்சிகளை மேலும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்து உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், இவரது காட்சிகளுக்கு ஆதியின் இசை கூடுதல் பலம் கொடுத்துள்ளது. மேலும் படத்தில் ஆர்ஜே விக்னேஷ், ஷாரா, எரும சாணி, விஜய், பிஜிலி ரமேஷ் ஆகிய யூடியூப் ஸ்டார்ஸ் இணைந்து கலக்கியிருக்கிறார்கள்.
ஜாதி, மதத்தால் பிரிந்திருப்பதை சேர்ப்பது,வாக்களிப்பதன் அவசியம் குறித்த வசனங்கள் படத்தின் பலம்.

Leave a Response