புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தீர்வல்ல பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் – மன்மோகன் சிங்..!

எல்லையில் போர் பதற்றம் நிலவும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் தாக்கி கொல்ல கூடாது என தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்தார். இதனை அடுத்து பாகிஸ்தானில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தீவிரவாதிகளை இந்திய விமானப்படை கொன்று பழி தீர்த்தது.

முன்னதாக, மும்பை தாக்குதல் நடத்தப்பட்டபோது பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை தயாராக இருந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்து விட்டது.

தற்போது மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் பாகிஸ்தானுக்கு மறக்கமுடியாத பதிலடியை இந்திய விமானப்படை அளித்துள்ளது என்று முன்னாள் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response