அதிமுக -பாமக கூட்டணி : டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சனம் செய்த ஸ்டாலின்..!

அதிகமுவின் கதை என்று புத்தகம் எழுதி வெளியிட்ட நிலையில்தற்போது அந்த கட்சியுடனேயே பாட்டாளி மக்கள் கட்சியினர் கூட்டணி வைத்துள்ளனர், அக்கட்சித் தலைவர் ராமதாஸ் வெட்கம் இல்லாதவர்” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் பேசும் போது, “தற்போது அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. 2009ம் ஆண்டு இந்த இருகட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டனர். அப்போது பாமக 9 தொகுதிகளில் தோல்வியடைந்தது என்று நான் கூறினேன். அப்போது அது பலருக்கு புரியவில்லை. அப்போது பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவையில்ஒரு சீட் தரப்படும் என்றும் கூறப்பட்டது. அங்கு ஒரு எம்பி சீட் என்பது இரண்டு எம்பி சீட்டுகளுக்கு சமமாகும்.

பாமகவின் தலைவர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் அதிமுக குறித்து என்ன பேச்செல்லாம் பேசியிருக்கிறார்கள். திமுகவைப் பற்றியும் தான் அவர்கள் பேசியிருக்கிறார்கள். அதிமுக பற்றி அறிக்கையில்லை, பேட்டியில்லை ராமதாஸ் ஒரு புத்தகமே வெளியிட்டார். அந்த புத்தகத்திற்கு ‘அதிமுகவின் கதை’ என தலைப்பும் வைத்திருந்தார்.

இப்படி எல்லாம் அதிமுக குறித்து தீவிரமாக விமர்சித்து விட்டு, தற்போது அகட்சியுடனேயே கூட்டணி வைத்துள்ளார்கள். அவர்களுக்கு வெட்கமும் கிடையாது மானமும் கிடையாது. மேலும்,ராமதாஸுக்கு நாட்டைப்பற்றி கவலை இல்லை. அவருக்கு பணம் பற்றி தான் கவலை” என்று திமுக தலைவர் ஸ்டாலின் பாட்டாளி மக்கள் கட்சி குறித்தும் அதன் நிறுவனர் ராமதாஸ் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

Leave a Response