“கோகோ மாக்கோ” விமர்சனம் இதோ..!

சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் கதாநாயகனாகவும், நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் , சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்க்கும் படம் தான் “கோகோ மாக்கோ”.

காமெடி கலந்த சாலை பயணத்தில் தன் நோக்கத்தை நிறைவேற்ற நண்பர்களின் துணையோடு சாதிக்க துடிக்கும் இசை யமைப்பாளரின் அனுபவமே இந்த கோகோ மாக்கோவின் திரைக்கதை. கோவையில் தாறு மாறாக யோசித்து எதையாவது செய்வதை கோகோ மாக்கோ என்று சொல்வார்கள் அந்த டைட்டிலை வைத்திருப்பதும், அதற்காக கதை எழுதியிருப்பதும் புதுமை.

அருண்காந்த் ராப் பாடல்களை இசைத்து ஆடியோவை பிரபல இசைக் கலைஞர்களின் ஆல்பங்களை வெளியிடும் கம்பெனிக்கு அனுப்புகிறார். அந்தப் பாடல்களுக்கு பொருத்தமாக இளமை துள்ளும் வீடியோவை தயார் செய்து ஆடியோவுடன் அனுப்பினால் வெளியிடுவோம் என்று இசைக்கம்பெனியில் சொல்கின்றனர். தன் நண்பர் சாம்ஸ் உடன் சேர்ந்து ராம்குமார்-தனுஷா காதல் ஜோடியினையும் இணைத்து மலைப்பிரதேசத்தில் பயணத்திற்கு அருண்காந்த் அனுப்புகிறார். அங்கே அவர்களை வைத்து எடுக்கும் காதல் கலந்த பயண அனுபவங்களை சாம்ஸ் அருண்காந்திற்கு வீடியோவாக அனுப்புகிறார். அருண்காந்தின் வீடியோ அடங்கிய பாடல்களை இசைக்கம்பெனி ஒத்துக் ;கொண்டதா? இல்லையா? அதன் பின் அருண்காந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பதே கோகோ மாக்கோ படத்தின் கதை.

திரைக்கதை லேசாக தலை சுற்றும் அளவுக்கு இருக்கிறது. ஒளிப்பதிவை பொறுத்த வரை கோப்ரோ கேமராவில் மொத்த படமும் எடுத்திருப்பது நிறைவு. சொல்ல நினைத்ததை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் ரசிக்க முடியவில்லை சிரிக்க முடியவில்லை. மொத்தத்தில் கோகோ மாக்கோ இசைக்கலைஞனின் நிறைவேறாத ஆசை எனலாம்.

Leave a Response