மாநில அரசுக்கு தனி அதிகாரம் இருந்திருந்தால் இது நடந்திருக்கும் – இயக்குநர் அமீர்..!

மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆளுநருக்கு 7 பேரை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தும்.

இன்னும் விடுதலை குறித்த எந்த பதிலும் இல்லை.

இதற்கிடையே, பேரறிவாளனை அவ்வப்போது சந்தித்து இயக்குநர் அமீர் ஆறுதல் தெரிவித்து வருவதுடன், அவர்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்தநிலையில், கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். பின்னர்

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசுக்கு என தனியாக அதிகாரம் இருந்திருந்தால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்றார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கும் என்றும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

Leave a Response