“பேட்ட” இளமை ரகசியத்தை உடைத்தார் சூப்பர்ஸ்டார்..!

ரஜினி நடிப்பில் உருவான ‘பேட்ட’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக பலரும் கூறி வருகிறார்கள்.

இத்தனை இளமையாக இத்தனை ஸ்டைலாக ரஜினியை எப்படி நடிக்க வைத்திருப்பார்கள் என்ற கேள்வி எல்லோருக்குமே எழுந்திருப்பது உண்மை. ‘பேட்ட படத்தில் என்னை உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்’ என்று உண்மை காரணத்தை விளக்கியுள்ளார் ரஜினி.

அமெரிக்காவில் ஓய்வை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், இதுகுறித்து, சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது :

“பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம். பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்” என்றார்.

Leave a Response