ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது – சந்தீப் நந்தூரி..!

ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தபோது, முதலமைச்சர் பழனிசாமி இது இறுதி தீர்ப்பு அல்ல,உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அரசு தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படமாட்டாது.மேலும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க வேண்டும் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

அதுமட்டுமின்றி தேசிய பசுமை தீர்ப்பாயம் பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாக தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Leave a Response