பிரஷாந்த்-ன் “ஜானி” திரைப்படத்தின் விமர்சனம் ..!

நடிகர் பிரசாந்த் தன்னுடன் 5 பேரை சேர்த்துக்கொண்டு இரண்டரை கோடி பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் அவர்களும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் தான் இணைகிறார்கள் ஆனால் ஹீரோ பிரசாந்த் அந்த நான்கு பேரையும் எப்படியாவது கழட்டி விட வேண்டும் அந்த பணத்தை தானே கொள்ளையடிக்க வேண்டும் தனது காதலியுடன் செட்டிலாக வேண்டும் என மாஸ்டர் பிளான் செய்கிறார்.

ஆனால் பிரசாந்த் போடும் பிளான் அந்த நான்கு பேருக்கும் ஒவ்வொருத்தருக்கும் தெரியவர அந்த நான்கு பேரையும் பிரசாந்த் என்ன செய்கிறார் பணத்தை கொள்ளையடித்தாரா செட்டிலானாரா என்பதுதான் மீதிக்கதை.

பிரசாத் நீண்ட வருடங்களுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் அதற்காக தற்போது நடித்துள்ள படத்தில் பழைய படத்தில் உள்ள எனர்ஜி சற்று குறைவு ,

மேலும் படத்தில் சஞ்சிதா ஷெட்டி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்துள்ளார், இவர்களை விட படத்தில் ஆனந்தராஜ் அடிக்கும் கவுண்டர் தான் படத்திற்கு வலு சேர்த்துள்ளது அதேபோல் பிரபுவும் தனது பங்கிற்கு படத்திற்கு வலு சேர்த்துள்ளார் படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பாக சென்றது ஆனால் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு கொஞ்சம் குறைந்தது.

இந்த படத்தை பார்த்தால் மங்காத்தா படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது, ஒளிப்பதிவு ஓகே, இசை பெரிதாக வையம் கவரவில்லை படத்தில் கொஞ்சம் காமெடி இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஜானி திரைப்படம் செம்ம சஸ்பென்ஸ் த்ரில்லர் இல்லை என்றாலும் டீசண்ட் த்ரில்லர்.

Leave a Response