கஜா புயல் நிதி கோரி பிரதமரை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..!

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சுருட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும், நிதியுதவியும் வழங்கினார். தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களை ஆய்வு செய்ய முடியாமல் ஆய்வுப் பணிகளை பாதியிலேயே நிறுத்தினார்.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதி கோரி பிரதமர் மோடியை நாளை காலை சந்தித்து பேசுகிறார். இதற்காக இன்று மாலை விமானம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. சந்திப்பின்போது 13,000 கோடி ரூபாய் அளவுக்கு புயல் நிவாரண நிதியை பிரதமரிடம் முதலமைச்சர் கோரவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Response