ஆந்திராவில் சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடு அதிரடி..!

ஆந்திராவில் மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளை பகடைக்காய்களாக உபயோகப்படுத்தி தனக்கு வேண்டாதவர்கள் மீது ஏவி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள், பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தனது சொந்த நலன்களுக்காகவும், சிபிஐ-ன் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்துகிறது என குற்றம்சாட்டியுள்ள சந்திரபாபு நாயுடு,

ஆந்திர பிரதேசத்தில் அனுமதியின்றி சிபிஐ எந்த ஒரு சோதனையும், விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது என அந்திரடியாக உத்தரவிட்டு உள்ளார். மேலும், ஏற்கனவே ஆந்திராவில் சிபிஐ சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியையும் திரும்ப பெற்றுள்ளார்.

இதன் காரணமாக இனிமேல் சிபிஐ, ஆந்திராவில் மாநில அரசின் அனுமதியில்லாமல் எந்த ஒரு வழக்கிலும் தலையிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும், இதைத்தொடர்ந்து சிபிஐ பணிகளை மேற்கொள்ள மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு ஆந்திர அரசு அதிகாரம் அளித்தும் உத்தரவிட்டு உள்ளது.

இதற்கான உத்தரவு கடந்த 8ந்தேதி பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை மத்திய அரசு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி செய்திதொடர்பாளர், கடந்த 6 மாதங்களாக சிபிஐ-யில் நடக்கும் சம்பவங்களுக்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான கருவியாக சிபிஐ பயன்படுத்திக் கொண்டதன் மூலம் அதன் சுதந்திரம் இழந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிபிஐ எனப்படும் மத்திய குற்றப்புலயாய்வு பிரிவு, தலைநகர் டில்லியில் மட்டுமே தனது அதிகாரத்தை செயல்படுத்த உரிமை பெற்றது. பிற மாநிலங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், ம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response