கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பும் சர்கார் : விஜய் மீது வழக்குப் பதிவு..!

சர்கார் திரைப்படம் கடந்த புதன் கிழமையன்று உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிவருகிறது. இப்படத்தின் ஆரம்பம் முதலே வெறும் சர்ச்சைகள் தான். முதல் போஸ்டர் வெளியானவுடனே, புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் போஸ்டர்கள் வெளியாகியிருக்கிறது என்று கூறி அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் படத்தின் கதை யாருக்கு சொந்தம் என்று பெரிய பிரச்சனை பூதாகரமாக வெளியாகி நீதிமன்றம் வரை சென்று ஒரு வழியாக படம் வெளியானது. படம் வெளியான பின்பும் இலவசங்கள் கொடுப்பது சரியா தவறா என்ற ரீதியில் மீண்டும் சர்ச்சைகள் உருவாகின. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கூலாக சர்கார் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்கள் திரைப்பட குழுவினர். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

தமிழகத்தில் நிலை கொஞ்சம் சீராக, மீண்டும் கேரளத்தில் புதிய பிரச்சனைகள் உருவாகியிருக்கிறது. புகை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை வைத்து பெரிய பெரிய பேனர்கள் தயாரிக்கப்பட்டு கேரளா மாநிலம், திருச்சூரில் இருக்கும் ராம்தாஸ் திரையரங்கின் முன்பு வைக்கப்பட்டிருந்தது.

புகை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அந்த பேனர்கள் இருந்ததாக கூறி அதனை அம்மாவட்ட மருத்துவ அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதாக அந்த பேனர்கள் இருந்ததாக கூறி மருத்துவ அதிகாரி சன் பிக்சர்ஸ், நடிகர் விஜய், படத்தின் விநியோகஸ்தர், அந்த பேனர்கள் மற்றும் போஸ்டர்களை ப்ரிண்ட் செய்த ரசிகர் மன்றம் மற்றும் திரையரங்கின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கேரள சுகாதாரத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Leave a Response