ஊரில் வரக் கூடாதது வந்துவிட்டால் அனைவரும் விரட்டியடிப்பார்கள்- வைகோ..!

ஊரில் வரக் கூடாதது வந்துவிட்டால் அனைவரும் விரட்டியடிப்பார்கள் என வைகோ தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் சிவகாசி பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.

இந்த தொழிலை மூடினால் பல லட்சம் குடும்பங்கள் பிழைக்க முடியாத நிலை ஏற்படும். தீப்பெட்டி தொழில் பட்டாசு தொழில் குறித்து அதே தொகுதியில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் சத்தம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அப்போது மூன்று முறை அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானியிடம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசி இதுகுறித்து விளக்கியுள்ளேன். உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி பட்டாசு வெடிக்கக் கூடாது என்பது காலங்காலமாக கொண்டாடி வரும் முறையை எதிரானது.

தற்போது நமது பட்டாசு ஆலைகளுக்கு போட்டியாக சீன பட்டாசுகள் வருவதால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தொழில் நடத்த முடியாத நிலை உள்ளது. மத்திய மாநில அரசு பட்டாசு ஆலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலையை கவனம் கொண்டு செயல்பட வேண்டும்.

நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலையை அரசு கவனம் கொண்டு விளக்க வேண்டும். பத்து பேர் சேர்ந்து ஒரு எதிரியை துரத்துவது மூலம் அவர்கள் பலசாலி ஆகிவிட மாட்டார்கள். ஊரில் வரக்கூடாது வந்துவிட்டால் அனைவரும் சேர்ந்து விரட்டியடிப்பார்கள் என வைகோ கூறினார்.

Leave a Response