பழ.கருப்பையா நாக்கை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யக் கூடியவர் – அமைச்சர் காமராஜ் விமர்சனம்..!

திருவாரூரில் நடந்த இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், ‘‘பழ.கருப்பையா நாக்கை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யக் கூடியவர்” என அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக சார்பில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ் “இலவசத்தை நம்பாதீர்கள் என சிலர் சொல்கிறார்கள், காசுக்காக படம் நடிப்பது, எடுப்பது அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பாமர மக்கள் தான் எது வேண்டும் எது வேண்டாமென்று சொல்ல வேண்டும். இலவசத் திட்டங்களால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது, கிராமப்புறங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது”என்று கூறினார்.

மேலும் “ பழ.கருப்பையா ஒரு வியாபாரி, நாக்கை வைத்து அவர் வியாபாரம் செய்பவர். பழ.கருப்பையா அதிமுகவில் இருந்தபோது எங்களிடமே பணம் வாங்கி கொண்டு தான் மேடையில் பேசுவார். அமைச்சர்களில் யார் நல்லவர் என பழ.கருபாபையா கேட்கிறார். நான் சொல்கிறேன் அதிமுகவின் அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் தான் என மார்தட்டி சொல்வேன்” என்றார். வேணுமென்றால் நாளை நான் நேராக வருகிறேன். இரண்டு பேரும் ஒரே இடத்தில் விவாதிக்க தயாரா என கேள்வியும் எழுப்பியுள்ளார் அமைச்சர் காமராஜ்.

Leave a Response