ஜெயலலிதா இருந்திருந்தாலும் விஜய்யின் செல்வாக்கை அசைத்திருக்க முடியாது – பழ.கருப்பையா..!

நடிகர் விஜய் – இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள சர்கார் படம் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்துள்ளதால், அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரசியல் தலைவர் பழ.கருப்பையா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியது பின்வருமாறு.

சர்கார் படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன். சர்கார் முழுக்க முழுக்க அரசியல் படம். திரைக்கதை மற்றும் வசனத்தை நன்கு யோசித்தே முருகதாஸ் அமைத்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலின் பிரதிபலிப்புதான் சர்கார். அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை சர்கார் சொல்கிறது.

விஜய் இந்த படத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்னவென்றால் விஜய்க்கு இருக்கும் கிரேஸ்தான். இளைஞர்களும், இளைஞிகளும் விஜய்க்காக தவிக்கிறார்கள். இப்படி இருக்கையில், ஜெயலலிதா இருந்திருந்தாலும் விஜய்யின் செல்வாக்கை அசைத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர்கள் பலர் விஜய், ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பாரா, இது போன்ற வெளியாகி இருக்குமா போன்று கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், பழ.கருப்பையாவின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response