சர்கார் திரைப்படத்தின் ‘அந்த கருத்துக்கு’ பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவு..!

சர்கார் திரைப்படம் அதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், அத்திரைப்படம் வலியுறுத்தும் ஒரு காட்சியை உண்மை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது.

சர்கார் திரைப்படம் நான் பார்க்கவில்லை. இதற்கு முன்னாடி இலவசங்கள் கொடுக்கப்பட்டதெல்லாம் எங்கே உள்ளது என்பது பொது மக்களுக்கும் தெரியும். அந்த வியாபாரம் செய்ய கூடியவர்களுக்கும் தெரியும். (இரும்பு கடைகளுக்கு போடப்பட்டதாக கூறப்படுவதை பொன்.ராதாகிருஷ்ணன் மறைமுகமாக சொல்கிறார்).

நான் திரைப்படத்தை பார்க்கவில்லை என்பதால் அதிகமாக கருத்து சொல்ல விரும்பவில்லை. திரைப்படத்தில் உள்ளவை பொய்யாக இருந்தால் அதை ஏற்க முடியாது. நான் திரைப்படங்கள் பார்த்து வருடக் கணக்காகிவிட்டது என்றார்.

தேவர் மகன்2 என்ற பெயரில் படம் எடுக்க கூடாது என்று டாக்டர்.கிருஷ்ணசாமி கூறிய கருத்து பற்றி நிருபர்கள் கேட்டபோது, தேவர் மகன் திரைப்படம் நான் பார்த்துள்ளேன். எனக்கு தெரிந்து அந்த படத்தில் பெரிய தவறு இருந்ததாக தெரியவில்லை. டாக்டர்.கிருஷ்ணசாமி எதை குறிப்பிட்டு சொன்னார் என தெரியவில்லை.

எல்லா ஜாதிகளுக்கும் தங்களை பெருமைப்படுத்தி கொள்ள முழு உரிமை உள்ளது. ஆனால் எந்த ஒரு ஜாதிக்கும் பிற ஜாதியை சிறுமைப்படுத்த உரிமை கிடையாது என்பதுதான் எனது கருத்து. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Response