பா.ஜ.க அரசு முடிவுக்கு வரும் நாளே மக்களுக்கு உண்மையான தீபாவளி – சந்திரபாபு நாயுடு..!

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு முடிவுக்கு வரும் நாளே மக்களுக்கு உண்மையான தீபாவளி என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடியுள்ளார்.

ஆந்திராவுக்கு மோடி உறுதி அளித்தபடி சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததால், பாஜ கூட்டணி யில் இருந்து தெலுங்குதேசம் விலகி பாஜகவையும், மோடியையும் கடுமையாக வசை பாடி வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. அதைத்தொடர்ந்து பாஜக அரசு மீது கடந்த நாடாளுமன்ற தொடரின்போது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாஜவை தோற் கடிக்க களமிறங்கி உள்ளர். இதன் காரணமாக, பா.ஜ.க வுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி ஒருங்கிணைத்து வருகிறார் சந்திரபாபு நாயுடு.

ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம்ஆத்தி கட்சி தலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை காணமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மோடி அரசு முடிவுக்கு வரும் நாளே தீபாவளி என்று கூறி உள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு மிக மோசமாக செயல்படுகிறது. மனித நேயமற்று தன்மையுடன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது இதன் காரணமாக தற்போது கொண்டாடப்படுவது தீபாவளி அல்ல என்றும், மோசமாக ஆட்சியை நடத்தும் மோடி தலைமை யிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி. அந்த தினத்தை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்

Leave a Response