நேரத்தை கடந்து பட்டாசு வெடித்த 600 பேர் மீது வழக்கு..!

தமிழகம் முழுவதும் நீதிமன்ற அறிவிப்பின்படி அரசு கொடுத்த நேரத்தில் பட்டாசு வெடிக்காமல் நீதிமன்ற அவமதிப்பு செய்த 700 பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினாலும் 2018ல் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. காற்று மாசை குறைப்பதற்காக இந்த ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசும் ஆணை போட்டது. இதனால் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருமே வருத்தம் அடைந்தனர்.

சென்னை நகரம் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை வானில் வண்ண வண்ண நிறங்களில் ஒளிகள் மின்னின. அந்த 1 மணி நேரத்தில் ஏராளமான புகையும் காணப்பட்டது .

இதனிடையே அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் 700 பேர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 600 வழக்குகள் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் 4 வழக்குகள், கடலூரில் 4 வழக்குகள் விழப்புரத்தில் 135 வழக்குகுள், ராசிபுரம் – 1, கொடைக்கானல் – 2, நெல்லை – 10,விருதுநகர் – 80,கோவை – 48, திருப்பூர் – 57 வழக்குகளும் போடப்பட்டுள்ளன. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசாணையை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Response