கமலுக்கு பின்னால் பாரதிய ஜனதா கிடையாது, ஆனால் ரஜினிக்கு பின்னால் : இளங்கோவன் தாக்கு..!

ரஜினிகாந்த் கட்சியே தொடங்கமாட்டார். கமல் பின்னால் பாஜக இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஓராண்டுகள் ஆகவுள்ள நிலையில் அவர் இதுவரை தொடங்காததால் எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

எனினும் கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டின் முன்னாள் தலைவர் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் கமல் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவர் மதசார்பற்ற கொள்கை உடையவர். காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பது வரவேற்கத்தக்கது. கூட்டணியில் சேர்வதை ராகுலும், மு.க.ஸ்டாலினும் பேசி முடிவெடுப்பார்கள்.

கமலுக்கு பின்னால் பாரதிய ஜனதா கிடையாது. ஆனால் ரஜினிக்கு பின்னால் இருக்கிறது. அவர் கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவரது படங்கள் வெளிவரும்போது இப்படி எதையாவது பேசுவார்.

இப்படியே சொல்லி கொண்டிருந்தால் அடுத்தடுத்து தேர்தல் வந்து கொண்டிருக்கும். ஆனால் அவர் அரசியல் கட்சி தொடங்கமாட்டார். பா.ஜனதாவோடு இணைந்தால் மொத்தமாக காணாமல் போய்விடுவார்கள்.

குக்கிராமங்களில் கூட மோடியை பற்றிய பேச்சு இருந்தது. அவர் மீது நம்பிக்கை இருந்தது. இப்போது எல்லாம் போய் விட்டது. கிராமங்களில் மோடியை பற்றிய ஏச்சுதான் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை வீசுகிறது.

இன்று நான் அ.தி.மு.க.வில் இருந்து இருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன். பாஜக இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் திருநாவுக்கரசரை நாம் தலைவராக வைத்துள்ளோம். இவரை மாற்ற வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர் என்றார்.

Leave a Response