கள்ளக் கதை மூலம் கள்ள ஓட்டு குறித்த படம் எடுத்திருக்கிறார்கள் : சர்காரை சுறண்டும் தமிழிசை..!

கள்ளக் கதை மூலம் கள்ள ஓட்டு குறித்த படம் எடுத்திருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை தமிழிசை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மதச்சார்பற்ற கூட்டணி வைக்க வேண்டும் என யார் கூறினாலும் அது எங்களுடன்தான் வைக்க வேண்டும். ஏனெனில் நாங்கள்தான் மதசார்பற்ற ஆட்சியை நடத்தி வருகிறோம். கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு பற்றி படம் எடுத்திருக்கிறார்கள்.

மோடியின் ஆட்சியில் தான் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தனது குடும்பத்தை வளப்படுத்துவதே ப.சிதம்பரத்தின் நோக்கம் ஆகும். தீபாவளி பரிசாக மோடி பல்வேறு திட்டங்களை வெளியிட உள்ளார். எத்தனை ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுகள் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது.

முதல்வராக கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும். ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் 40 தொகுதிகளிலும் காங்கிரஸால் வெற்றி பெற முடியாது.

சர்கார் பட விவகாரம் மூலம் திரைத்துறையில் கதை திருட்டு அம்பலமாகியுள்ளது. டிடிவி அணியிலுள்ள சில தகுதிநீக்க எம்எல்ஏக்கள் மேல்முறையீடு இல்லை என்று கூறியுள்ளனர்.

சந்திப்புகள் மூலம் டிடிவி தினகரன் அணியினரின் முடிவுகள் அவ்வப்போது மாறுகின்றன. பாஜக கார்ப்பரேட்டுகளுக்கான கட்சி அல்ல, காமன்மேனுக்கான கட்சி ஆகும். சினிமாவில் விஜய் நேர்மையாக இருக்க வேண்டும் என்றார்.

Leave a Response