கதை திருட்டை பற்றியும், மோடியின் சிலை திறப்பை பற்றியும் பேசும் நாம், இதை கண்டுகொள்ளவா போகிறோம்..!

ஆத்தூரில் 8 ஆம் வகுப்பு மாணவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த அயோக்கியன் சாமிவேலை நிக்கவெச்சு சுட்டுத் தள்ளனும் என மன்சூர் அலிகான் ஆவேமாக பேசினார்.

சமீபத்தில் சேலம் ஆத்தூரில் ஆசைக்கு இணங்க மறுத்த ராஜலட்சுமி(13) என்ற சிறுமியை டிரைவரான சாமுவேல் என்பவன் அவரது பெற்றோர் முன்னிலையிலேயே தலையை தனியாக துண்டித்து கொடூரமாக கொலை செய்தான். ஆனால் மீடியாக்கள் இதனை வெளிகொண்டுவர வில்லை. அவர்களுக்கு கதை திருட்டை பற்றியும், மோடியின் சிலை திறப்பை பற்றியும் பேசவே நேரம் சரியாக இருக்கிறது.

இந்நிலையில் பல்வேறு சமூக அவலங்களை தைரியமாக பேசி வரும் மன்சூர் அலிகான், இதுகுறித்து பேசுகையில் தூத்துக்குடியில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளிய காவல்துறை அந்த குழந்தை ராஜேஸ்வரியை கொன்ற அயோக்கியன் சாமுவேலை நிக்க வைத்து சுட்டுத் தள்ள வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

Leave a Response