ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை தமிழகம் வருகை..!

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை வைக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட அந்த சிலை தற்போது சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மற்றும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5, 2016 அன்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது முழுவுருவச் சிலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 24ல் திறக்கப்பட்டது.

ஆனால், அந்த சிலையின் முகம் ஜெயலலிதாவின் முகம் போன்று இல்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து விரைவில் இந்த சிலை மாற்றப்படும் என அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜெ. சிலையை ஆந்திராவிலிருக்கும் ரமேஷ் என்கிற சிற்பி தலைமையிலான குழு தயாரித்துள்ளது. விரைவில் தற்போதுள்ள சிலை அகற்றப்பட்டு அங்கு இந்த புதிய சிலை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மிகவும் தத்ரூபமாக உள்ளது எனவும் மக்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Response