நீதிமன்றம், போலீஸை அவமதித்து பேசியதற்க்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் – எச்.ராஜா அந்தர் பல்டி..!

நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் .

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டினார். மிகவும் கொச்சையாக அவர் திட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

ஆனால் தமிழக போலீஸ் அவரை கடைசி வரை கைது செய்யவே இல்லை. இவர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கைது செய்யப்படவில்லை. இவர் பிடிக்க தனிப்படை கூட அமைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கடைசிவரை கைது செய்யப்படவே இல்லை.

இந்த நிலையில் இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது எச்.ராஜாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது. இது தொடர்பான வழக்கில் இன்று விசாரணை நடந்தது.

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றம் வந்தார். காலை 11 மணிக்கு அவர் நீதிபதிகள் முன் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இதையடுத்து வழக்கு விசாரணையில் நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. நான் பேசியது தவறுதான். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என்று தாமதமாகத்தான் உணர்ந்தேன், என்றுள்ளார்.

நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி எச்.ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார். இவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து இவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டதன் மூலம் தண்டனையில் இருந்து தப்பி உள்ளார் எச்.ராஜா.

Leave a Response