பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்..!

“பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் #WeToo இயக்கம் தொடக்கம்”

‘மீ டூ’வை ( #MeToo) தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக ‘வீ டூ’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நடிகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.

ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ‘வீ டூ மென்’ என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

“பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக இந்த இயக்கத்தை தொடங்கி உள்ளோம். இந்த இயக்கத்தில் நடிகர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். விருப்பத்தின் பேரில் ஆண்களுடன் சேர்ந்து பழகும் பெண்கள் மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகாரை கையில் எடுக்கின்றனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் சில பெண்கள் செயல்படுகின்றனர்” என்று அந்த இயக்கத்தின் உறுப்பினரான திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான வாராகி கூறியுள்ளார்.

இதுபோன்ற புகார்களை அனுமதித்தால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, இதுபோன்ற புகார்களை ஏற்பது தொடர்பாக உரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Response