சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் அவர்களை இரண்டு துண்டாக வெட்ட வேண்டும்-மலையாள நடிகர் சர்ச்சை பேச்சு..!

சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை இரண்டாக வெட்டுவோம் என மலையாள நடிகர் ஒருவர் பேசி உள்ளார்.

நெடுநாட்களாக சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை போகலாம் என உத்தரவிட்டது. நாடெங்கும் இந்த தீர்ப்பை எதிர்த்து ஆர்பாட்டங்களும் பேரணிகளும் நடந்து வருகின்றன.

கேரள மாநிலம் கொல்லம் அருகே சவேரா என்னும் இடத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடந்த பேரணியில் பாஜகவை சேர்ந்த ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் பிரபல மலையாள நடிகரான கொல்லம் துளசி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த பேரணியில் கொல்லம் துளசி பேசியது சர்ச்சைக்குள்ளாகியது.

கொல்லம் துளசி, “நமது நம்பிக்கைக்கு எதிராக சபரிமலை தொடர்பாக நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர்கள் நால்வரும் முட்டாள்கள். அந்த தீர்ப்பை ஒட்டி சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் அவர்களை இரண்டு துண்டாக வெட்ட வேண்டும். அவற்றில் ஒன்றை டில்லிக்கும் மற்றொன்றை கேரள மாநில முதல்வருக்கும் அனுப்ப வேண்டும்.

பல பெண்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த பெண்களிலும் வயதான பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு போகலாம். அவர்களில் யாராவது இளம்பெண்கள் சபரிமலைக்கு போக முயன்றால் அவர்களையும் இரண்டு துண்டாக வெட்ட வேண்டும்” என அந்த பேரணியில் பேசி உள்ளார்.

இவ்வாறு வெளிப்படையாக வன்முறையை தூண்டும் படி கொல்லம் துளசி பேசியது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

Leave a Response