ஆண்தேவதை படம் மிடில்கிளாஸ் மக்களுக்கான பாடம் – சத்யராஜ்..!

ரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்..

இந்தப்படம் வரும் அக்-12ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் பா.ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ், மீரா கதிரவன் கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை கண்டுகளித்தனர்.

படம் பார்த்தபின் சத்யராஜ் கூறியபோது,

“ரொம்பவே யதார்த்தமான படம்.. வாழ்க்கைல என்ன நடக்குதோ, குறிப்பாக மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருக்கிற பிரச்சனையை சினிமாவுக்கான எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் நல்லபடியா சொல்லியிருக்கிறார் தாமிரா. இந்தப்படம் நிச்சயமா ஒரு பாடமா அமையும். இந்தமாதிரி படங்கள் நிறைய வரவேண்டும்” என்றார்.

Leave a Response