பெண்களின் சுயமரியாதை, மதிப்புதவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை – லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..!

பெண்களின் சுயமரியாதை, மதிப்புதவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் நானும் பாதிக்கப்பட்டேன் என முன்வந்து சொல்கின்றனர்.அதே விஷயம், கோலிவுட்டிலும் நடைபெறுகிறது. நடிகைகள், பாடகிகள் பலரும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்… “திரைப்படத் துறையை மட்டும் குறை சொல்வது சரியல்ல. மாற்றம் வேண்டுமென்று நினைத்தால், எந்த மாற்றம் வேண்டுமோ அதன் கருவியாக நாம் இருக்க வேண்டும். அனுசரித்துப் போகக் கூடியவர்களாகவும், இரையாகக் கூடியவர்களாகவும் இருக்கும் பெண்கள் முதலில் மாற வேண்டும். நம்முடைய சுய மரியாதை மற்றும் மதிப்பை விட உயர்ந்தது எதுவுமில்லை” என பதிவிட்டுள்ளார்.

சாமான்ய மக்களின் வாழ்வில் நடக்கும் பாலியல் குற்றங்கள், அது சார்ந்த சமூகப் பிரச்சனைகளை தான் தொகுத்து வழங்கிய “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி மூலம் ஆராய்ந்தவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

நடிகையாகவும், இயக்குனராகவும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Response